அடக்கடவுளே.., தல தோனி தீவிர ரசிகருக்கு நேர்ந்த சோகம்.., பின்னணியில் இருக்கும் கதை என்ன?அடக்கடவுளே.., தல தோனி தீவிர ரசிகருக்கு நேர்ந்த சோகம்.., பின்னணியில் இருக்கும் கதை என்ன?

கிரிக்கெட் கடவுள் டெண்டுல்கரை தொடர்ந்து கிரிக்கெட்டில் தற்போது வரவு அதிகம் கொண்டாடப்பட்ட வீரர் என்றால் அது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் எம்.எஸ். தோனி தான். அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது அவருடைய ஒரு ரசிகர் செய்த காரியம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் பகுதியை சேர்ந்த கோபிகிருஷ்ணன் (34) என்பவர் எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகர். தோனி மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக  சென்னை சூப்பர் கிங்ஸ் கலரான மஞ்சள்  நிறத்தை தனது வீடு முழுவதும் அடித்து அந்த பகுதியில் மட்டுமின்றி சுற்று வட்டாரத்திலும் பேமஸ் ஆனார்.

இந்நிலையில் அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் நேற்று இரவு சில பேரிடம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதால் தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாளை பிரதமர் மோடி வருகை.., சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் – எந்தெந்த ஏரியாவில் தெரியுமா? முழுவிவரம் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *