பூமிக்கு அருகாமையில் தண்ணீர் உள்ள கிரகம் கண்டுபிடிப்பு.., விண்வெளி ஆராய்ச்சி மையம் அசத்தல்!!

பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. மேலும் இந்த தகவலை  நாசாவில் உள்ள  ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. அதன்படி புதிதாக கண்டறியப்பட்ட இந்த கோள் பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஜி ஜே 9827 டி என்று பெயரிடப்பட்டிருக்கும்  இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கிரகத்தின் வளிமண்டலத்தின் மேல் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்து இருப்பதால் இதன் காரணமாக உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு இதற்கு முன்பு கண்டறியப்பட்ட நீர் மூலக்கூறு இருக்கும் கிரகங்களை அதனுடன் ஒப்பிடும்போது இந்த கோள்  பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினார்.

டிரம்ப்க்கு எதிரான பாலியல் வழக்கு.., ரூ.640 கோடி அபராதம்.., நீதிமன்றம் அறிவித்த அதிரடி உத்தரவு!!

Leave a Comment