ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ரசிகர்களுக்கு ஒரு துக்க செய்தி.., இனி இந்த குரல் ஒலிக்காது.., வருத்தத்தில் திரையுலகம்!!
ஹாலிவுட்டில் எடுக்கப்படும் எல்லா படங்களும் தமிழ் ரசிகர்களுக்கு புரிய வேண்டும் ஏற்று தமிழில் டப்பிங் செய்து தற்போது வரை ஆங்கில படங்கள் வெளியாகி வருகின்றன. அப்படி ஹாலிவுட் படங்களுக்கு தமிழில் உயிர் கொடுப்பவர்கள் டப்பிங் ஆர்ட்டிஸ்ட். பொதுவாக 90ஸ் காலகட்டத்தில் ஹாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் அர்னால்டு. இவர் பல மெகா ஹிட் படங்களில் நடித்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ் ரசிகர்களே அவரை தூக்கி கொண்டாடியது என்று தான் சொல்ல வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்பேற்பட்ட நடிகருக்கு டப்பிங் கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கலைஞர் விஜயகுமார். அர்னால்ட் என்ற கதாபாத்திரத்திற்கு தனது குரல் மூலம் உயிர் கொடுத்து வந்த விஜயகுமாருக்கு கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல் நலம் சரியில்லாமல் போனது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.