FSSAI பதிவு ஆன்லைன் தமிழ்நாடு 2024FSSAI பதிவு ஆன்லைன் தமிழ்நாடு 2024

FSSAI பதிவு ஆன்லைன் தமிழ்நாடு 2024. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கொடுக்கக்கூடிய License ஆன்லைன் மூலம் வாங்குவது எப்படி என்பதை பற்றி தெரிந்துகொள்ள கீழ காணலாம்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் Food Safety and Standards Authority of India (FSSAI), என்பது, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் அமைந்த, உணவுப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் இறக்குமதி ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.

இந்தியாவில் உணவு மற்றும் உணவு சம்பந்தப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யும், சேமித்து வைக்கும், அல்லது விநியோகம் செய்யும் எந்தவொரு உணவு வணிகத்திற்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் உரிமம் தேவை. அந்த உணவு நிறுவனத்தின் அளவு மற்றும் தன்மையைப் பொறுத்து, FSSAI உரிமம் தேவை நிர்ணயிக்கப்படும். இந்த உரிமம், நிறுவனம் கொடுக்கும் உணவு பொருள்கள் தரமானதாக இருக்கும் என்பதற்காக FSSAIவால் வழங்கப்படுகிறது.

இந்த உரிமம் மொத்தம் மூன்று வகையில் உள்ளது. மத்திய உரிமம்(Central License), மாநில உரிமம்(State License) மற்றும் சாதாரண உரிமம் அல்லது பதிவு(Normal Registration). இந்திய முழுதும் உணவு சம்பந்தப்பட்ட வணிகம் செய்யும் நபர்கள் மற்றும் 20 கோடிக்கு மேல் விற்றுமுதல் இல்ல நபர்களும் மத்திய உரிமம் பெறவேண்டும். மாநில உரிமமானது, ஒரு மாநிலத்திற்குள் உணவு வணிகம் செய்பவர்கள், 12 லட்சத்துக்கு மேல் விற்றுமுதல் உள்ளவர்கள், 20 டன்க்கு அதிகமாக உணவு தயாரிக்கும் உணவகங்கள் வாங்க வேண்டும். சாதாரண உரிமம் அல்லது பதிவு என்பது 12 லட்சத்துக்கு கீழ் விற்றுமுதல் செய்யும் நபர்கள் மற்றும் சிறு சிறு உணவு தொழில் செய்பவர்கள் பெறவேண்டும்.

இந்த FSSAI உரிமம் பெற, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அதிகார பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்யவேண்டும். ஆன்லைனில் பதிவு செய்ய மூன்று முக்கிய தேவைகள் உள்ளன. முதலில், பதிவு செய்பவர்களின் புகைப்படம், முகவரிக்கு அடையாள சான்று மற்றும் நகராட்சி அல்லது பஞ்சாயத்து போர்டில் இருந்து கடிதம் ஆகிய அவசியம் வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கட்டணம் – ரூ.100/-

HUID ஹால்மார்க் தங்கம் தான் நீங்க வாங்குறீங்களா ! போலி முத்திரையை எப்படி கண்டுபிடிக்கலாம் ? இதோ முழு விபரம் உள்ளே !

அதிகார பூர்வ இணையதளம் வந்தவுடன், புதிய உரிமம்/பதிவுக்கு விண்ணப்பிக்கவும் (Apply for new license/registration) என்பதை தேர்வு செய்யவேண்டும். அதனை தேர்வு செய்த பிறகு வரும் பக்கத்தில், 3 விருப்பத்தேர்வுகள் இருக்கும். பொது / ரயில்வே நிலையம்/ விமானநிலையம் என கொடுக்கப்பட்டியிருக்கும். எங்கு கடை திறக்கப்படுகிறது என்பதை பொறுத்து இதிலிருந்து தேவையான ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து வரும் பக்கத்தில், எந்த மாநிலம் என்பதை தேர்வு செய்து, வணிக வகை அதாவது உற்பத்தியாளர்/ வர்த்தகம் மற்றும் சில்லறை விற்பனையாளர்/ உணவு சேவை/ மத்திய அரசு நிறுவனம்/ தலைமை அலுவலகம் அனா கொடுக்கப்பட்டிருக்கும். இதில் எது தேவை என்பது புரிந்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள வகையை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். பின், தொடர்ந்து செயல்படுவும்.

அதன் பின், “அனைத்து வணிகத்திற்கும் பதிவு செய்ய விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்” அதை அழுத்த வேண்டும். இதை தொடர்ந்து, விண்ணப்ப படிவம் காட்சியளிக்கப்படும். இதில் விண்ணப்பதாரர் தகவல்கள் மற்றும் உணவு வணிக முறை, வணிகம் பொருள்கள் பற்றிய விபரங்கள் ஆகியன பதிவிவேற்றவேண்டும். இதில் முக்கியமாக தண்ணீர், மின் தேவை ஆகியன பற்றி தகவல்கள் சரியாக பதிவேற்றி சேமித்து அடுத்தது என்பதை தேர்வு செய்து விபரங்களை சரிபார்த்து கொள்ளவும்.

இதை தொடர்ந்து விண்ணப்பதாரரின்முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பு விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும். இதை அனைத்தும் பதிவேற்றம் செய்த பின், உள்நுழை ID மற்றும் கடவுச்சொல் ஏற்படுத்திக்கொள்ளவும். இந்த செயல்முறை முடிந்த பின், விண்ணப்பதாரரின் தொலைபேசி எண்ணுக்கும், மின்னஞ்சலுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும், அதை பதிவேற்றி சமிர்ப்பித்தால் பதிவு ஆகிவிடும்.

பதிவான பின், ஆவணங்களை பதிவேற்றும் மற்றும் கட்டணம் செலுத்தும் பக்கம் வரும், அதில் புகைப்படம், அடையாள அட்டை மற்றும் நகராட்சியிலிருந்து வாங்கிய சான்றிதழ் ஆகியன பதிவேற்றம் செய்து, ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தவேண்டும். கட்டணம் செலுத்திய பின், fssai உரிமத்திற்க்கான பதிவு நிறை வாகிவிடும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

அதன் பின், வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள வணிகள் உள்நுளை (Login for Business), உள் போய், தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வாயிலாக ஒரு முறை கடவுச்சொல் மூலம் உள்நுழைந்து விண்ணப்பத்தின் நிலை பற்றி தெரிந்துகொள்ளலாம். 3 நாட்களிலிருந்து 1 வாரத்திற்குள் உரிமம் அளிக்கப்பட்டுவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *