தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து காணப்படும் நிலையில், சில முக்கிய மாவட்டங்களில் மட்டும் வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இனி பெட்ரோலே வேண்டாம் டா.., இளைஞர் செய்த அந்த காரியம்.., வைரலாகும் புகைப்படம்!!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய கூடும். குறிப்பாக தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களான ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.