தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்புதமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு. போக்குவரத்து துறை ஊழியர்கள் வருகிற ஜனவரி 4 ந் தேதி முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். இதுகுறித்து அவர்களுக்கு அமைச்சர் எஸ்.எஸ் .சிவசங்கர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு

போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலார்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என்று கடந்த பல நாட்களாகவே தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் ஊழியர்கள் பொறுமை இழந்து விட்டனர். அதனால் வருகிற ஜனவரி 4 ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியது.

இதை அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் .சிவசங்கர் அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை அறிவித்துள்ளார். அதில் அ .தி.மு.க ஆட்சி காலத்தில் 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை உரிய நேரத்தில் முடிக்க படாமல் இருந்தது. உங்களின் எந்த கோரிக்கையும் அவர்களால் ஏற்று கொள்ளப்படவில்லை.

இனி பெட்ரோலே வேண்டாம் டா.., இளைஞர் செய்த அந்த காரியம்.., வைரலாகும் புகைப்படம்!!

ஆனால் நமது மாண்புமிகு திராவிட மாடல் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆன பிறகு சீர்குலைக்கப்பட்ட ஊதிய விகிதம் மீண்டும் சீரமைக்க பட்டு ஊ. விகிதம் 2.57 காரணியாக வழங்க பட்டது. மேலும் அனைவருக்கும் 5 % ஊதிய உயர்வும் வழங்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்ற பட்டது.

கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை சீரழிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தான் உங்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மேலும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச பயணம் என பல்வேறு திட்டங்கள் நடைமுறைக்கு வந்தது.

அரசாணை 36 ஐ பிறப்பித்து போக்குவரத்து கழகங்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர் நம் முதல்வர். மேலும் புதிய பேருந்துகள் வாங்கவும் , புதிய பணியாளர்களை பணியில் அமர்த்தவும், பதவி உயர்வு, வாரிசு அடிப்படையிலான பணி போன்றவற்றை நிறைவேற்றி தந்தவர் நம் முதல்வர் .

JOIN WHATSAPP CHANNEL

சென்னை மற்றும் திருநெல்வேலி , தூத்துக்குடி போன்ற நகரங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பை அனைவரும் அறிந்ததே. இந்த இயற்கை பேரிடர் காலத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை கூட வழங்க முன்வரவில்லை. இந்த நிலையிலும் நம் தமிழக முதல்வர் நிவாரண தொகுப்பை வழங்கி வருகிறார்.

அதனால் இந்த பேரிடர் காலத்தில் போக்குவரத்து துறை தொழிற்சங்கம் முதல்வருக்கும் பொது மக்களுக்கும் உறுதுணையாக நிற்க வேண்டும். மக்கள் நிலையை கருத்தில் கொண்டு பேருந்தை இயக்க வேண்டும். தங்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்று கொள்ளப்பட்டு பொங்கல் திருநாள் பண்டிகைக்கு பின்னர் நிறைவேற்றப்படும். அதற்கான நடவடிக்கையை இந்த அரசாங்கம் மேற்கொள்ளும்.

எனவே போக்குவரத்து துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலார்கள் தங்களின் வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் அவர்கள் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *