
ஹாலிவுட் நடிகர் ஜானி வெக்டர் சுட்டுக்கொலை. பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வெக்டர் திருடர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் நடிகர் ஜானி வெக்டர் சுட்டுக்கொலை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஜானி வெக்டர் சுட்டுக்கொலை :
ஹாலிவுட் நடிகர் ஜானி வெக்டர் தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமல்லாது சூப்பர் செல், கோல்ட் சோல்ஜர்ஸ் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தற்பொழுது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடித்து வரும் ஜெனரல் ஹாஸ்பிட்டல் என்ற தொடர் இவருக்கு பெரும் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது 37 வயதான ஜானி வெக்டர் கடந்த 2007 ம் ஆண்டு ஆர்மி வைவ்ஸ் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். சைபெரியா, ஏஜென்ட் எக்ஸ், ஸ்டேஷன் 19 போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல் நகரில் கடந்த சனிக்கிழமை (25.05.2024) அதிகாலை 3 மணியளவில் அவரது காரில் திருடர்கள் திருட முயன்ற போது இவர் தடுத்ததால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
பிரஜ்வால் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி விசாரணைக் குழு முன்பு ஆஜராவதாக தகவல் – முழு ஒத்துழைப்பு தருவதாக கருத்து !
அத்துடன் இச்சம்பவம் நடந்த உடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக யாரும் தற்போது வரை கைது செய்யப்படாத நிலையில் தப்பிச்சென்ற குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றோம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.