பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் சரிந்து விழுந்த மேடை - அதிர்ச்சி அடைந்த ராகுல் காந்தி - ஷாக்கிங் வீடியோ!பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் சரிந்து விழுந்த மேடை - அதிர்ச்சி அடைந்த ராகுல் காந்தி - ஷாக்கிங் வீடியோ!

பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் சரிந்து விழுந்த மேடை: மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 6வது கட்ட தேர்தல் விரைவில் நடக்க இருக்கும் நிலையில் தற்போது அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று பீகார் மாநிலம் பாலிகஞ்ச்சில் தேர்தல் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மேடையில் ஏறி ராகுல் காந்தி தொண்டர்களுக்கு கையை அசைத்த போது எதிர்பாராத விதமாக மேடை உடைந்து விழுந்ததால் அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது திடீரென மேடை உடைந்த போது ராகுல் காந்தி உள்ளிட்டோர்  தடுமாறி கீழே விழுவது போல் சூழ்நிலை ஏற்பட்டதால்  தொண்டர்கள் பதறினர். விழபோவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட உடனடியாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேடையில் இருந்து வெளியேறினார். மேலும் இந்த சம்பவத்தை தொண்டர்களுக்கு சகஜமாக்க  கை அசைத்தவாறு மேடையில் இருந்து ராகுல் வெளியேறினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் சரிந்து விழுந்த மேடை – congress party – loksabha election 2024 – rahul gandhi

மொபைல் போன் அதிக வருஷம் உழைக்கனுமா? அப்ப சார்ஜ் இப்படித்தான் போடணும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *