உங்கள் I'D Proofல் நீங்கள் பயன்படுத்தாத சிம் இருக்கா உங்கள் I'D Proofல் நீங்கள் பயன்படுத்தாத சிம் இருக்கா

    உங்கள் I’D Proofல் நீங்கள் பயன்படுத்தாத சிம் இருக்கா. ஒருவர் சிம் கார்டு கடைகளில் வாங்க வேண்டும் என்றால் அதற்கு அந்த நபருடைய I’D Proof கொடுத்து தான் நாம் வாங்க முடியும். ஆனால் நம்முடைய I’D கொண்டு நாம் பயன்படுத்தாத சிம் நம்பர்களும் இருக்கின்றது. இத்தகைய நம்பர்களை வீட்டில் இருந்து எளிய முறையில் பிளாக் செய்ய எளிய வழிமுறைகள் பின்வருமாறு.

உங்கள் I'D Proofல் நீங்கள் பயன்படுத்தாத சிம் இருக்கா
உங்கள் I’D Proofல் நீங்கள் பயன்படுத்தாத சிம் இருக்கா
JOIN WHATSAPP CHANNEL

சிம் கார்டுகள் ஏன் செல்போன்களில் பயன்படுத்தப்படுகின்றது :

 தற்போது கல்வி நிறுவனங்கள் தொடங்கி உலகின் அனைத்து மக்களிடமும் பெரிதும் பயன்பாட்டில் இருப்பது செல்போன்கள். நாம் பயன்படுத்தும் செல்போன்களில் இருக்கும் தொலைத் தொடர்பு 

இருந்தால் தான் செல்போன்களை நாம் பயன்படுத்த முடியும். அத்தகைய தொலைத்தொடர்புக்கு பெரும் காரணமாக இருப்பது சிம் கார்டுகள். சிம் கார்டுகள் தான் மற்றவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள , SMS அனுப்ப மற்றும் 2G , 3G , 4G , 5G போன்ற இணையதள சேவைகளை சிம் கார்டுகள் தான் வழங்கி வருகின்றது. 

சிம் கார்டு வகைகள் :

1. நிலையான சிம் ( Standard Sim )

  2. மைக்ரோ சிம் ( Micro Sim )

  3. நானோ சிம் ( Nano Sim )

சிம் கார்டு பயன்கள் :

1. செல்போன் தொலைந்து விட்டாலோ அல்லது யாரேனும் திருடி விட்டாலோ செல்போன்களில் இருக்கும் சிம் கொண்டு எளிதில் கண்டு பிடிக்க முடியும். 

2. அழைப்புகள் மேற்கொள்ள முடியும்.

 3. இணைய சேவைகள் பயன்படுத்த வேண்டும் என்றால் சிம் கார்டு அவசியம்.

Earbuds பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மூளையும் சேர்ந்து பாதிக்கப்படும் அபாயம்  ! 

சிம் கார்டு வாங்குவது எப்படி ?

 இந்தியாவில் சிம் கார்ட் விற்பனையில் வோடபோன் , ஏர்டெல் , ஜியோ போன்ற நிறுவனங்கள் விற்பனை செய்கின்றது. சிம் கார்ட் வாங்க வேண்டும் என்றால் வாங்கும் நபரின் பெயர் மற்றும் முகவரி சரியாக இருக்க வேண்டும். எனவே சிம் வாங்கும் போது பெயர் மற்றும் முகவரிக்கு என்று ஆதார் கார்டு / ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் ஒரு I’D Proof மற்றும் புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது கடைகளில் 299 முதல் சிம் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

I’D Proofயை சமர்ப்பிப்பதால் ஏற்படும் சிக்கல்கள் :

 ஒரு நபர் சிம் வாங்க வேண்டும் என்றால் கட்டாயமாக I’D Proof சமர்ப்பிக்க வேண்டும். அப்படியாக சிம் வாங்கும் போது ஒரு நபரின் I’Dயை பயன்படுத்தி வேறு யாரேனும் சிம் வாங்கி பயன்படுத்துவதர்க்கு வாய்ப்புகள் உள்ளது. வேறுஒருவரின் சிம் எண் பயன்படுத்தி குற்றம் ஏதாவது செய்தால் சிம் எண்ணில் இருக்கும் I’D வழங்கிய நபர் குற்றம் செய்தவராக கருதப்படலாம்.

ஒருவரின் I’D இருக்கும் பயன்படுத்த நம்பரை கண்டறியும் முறை :

  நம்முடைய I’Dயில் இருக்கும் நம்பரை யாராவது பயன்படுத்தி வந்தால் பயனாளருக்கு தெரியாமல் பிளாக் செய்யும் முறைகளை அறிந்து கொள்வோம்.

1. கூகுளில் TAFCOP என்று டைப் செய்ய வேண்டும்.

2. TAFCOP என்ற இணையதளத்தினை திறக்க வேண்டும்.

3. TAFCOP என்ற பக்கத்தில் கீழே பார்த்தல் 10 Digit Mobile Number என்று இருக்கும். 

4. இதில் உங்களின் மொபைல் எண்னை பதிவு செய்ய வேண்டும். 

5. மொபைல் நம்பரை பதிவு செய்த பின் Enter Captcha அதில் மேலே காட்டும் Captchaவை அப்படியே பதிவு செய்ய வேண்டும்.

6. Captchaவை பதிவு செய்த பின் Validate Captcha வை கிளிக் வேண்டும்.

7. உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும்.

8. OTP யை பதிவு செய்ய வேண்டும்.

9. சரியான OTPயை பதிவு செய்த பின் Login என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

10. இப்போது உங்கள் I’Dயில் இருக்கும் சிம் நம்பர்கள் வரும்.

 உங்கள் I'D Proofல் நீங்கள் பயன்படுத்தாத சிம் இருக்கா

11. இதில் நீங்கள் பயன்படுத்தாத சிம் நம்பர் இருந்தால் Not My Number என்பதற்கு Ok கொடுக்க வேண்டும்.

12. சிம் நம்பர்களில் உங்களுக்கு வேண்டாம் என்று கருதும் சிம் எண் இருந்தால் Not Report என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

13. கிளிக் செய்த பின் Report என்று ஒரு நம்பர் வரும் அதனை மறக்காமல் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

14. தற்போது நீங்கள் பயப்படுத்ததா மற்றும் வேண்டும் என்று என்னும் சிம் நம்பர்கள் பிளாக் செய்யப்பட்டு இருக்கும்.

15. பிளாக் செய்யப்பட்டதை உறுதி செய்ய மீண்டும் முதலில் இருந்து மொபைல் எண் , Captcha , OTP பதிவு செய்தால் மேலே Regeiest என்று இருக்கும் இதில் சிம் நம்பரை டைப் செய்தால் நம்பர் பிளாக் ஆகி இருக்கின்றதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

எங்கள் முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்

TAFCOP இணையதளம் நம்பிக்கையானதா ? :

TAFCOP இனையதளம் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இணையதள பக்கம். எனவே TAFCOP பக்கத்தினை பயன்படுத்தி வோடபோன் , ஜியோ , BSNL போன்ற இந்தியாவில் இருக்கும் நெட்வோர்க்களை பிளாக் செய்து கொள்ளலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *