ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம்ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம்

   ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம். சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 7வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது வரையில் அவர்களிடம் நடத்தப்பட்ட 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளது. தொகுப்பூதியம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு ஏற்குமா என்பது பலரின் கேள்வியாக இருக்கின்றது.

ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம் ! நாங்கள் கார் வாங்க ஊதியம் கேட்கவில்லை !

ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் :

   இடைநிலை ஆசிரியர்கள் கடந்த செப்டம்பர் 28ம் தேதி அன்று சென்னை டிஎஸ்பி வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்தனர். தற்போது வரையில் 7 நாட்களும் இவர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச்சொல்லி அகிம்சை முறையில் மட்டுமே போராடி வருகின்றனர். 

JOIN WHATSAPPCLICK HERE

ஆசிரியர்களின் கோரிக்கை :

   தகுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு ‘ சம ஊதியம் ‘ மற்றும் “ பணி நிரந்தரம் “ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகின்றது.

மருத்துவமனையில் ஆசிரியர்கள் :

   இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். இதில் 200க்கும் அதிகமான ஆசிரியர்கள் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சில ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு போராட்ட களத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

அரசின் பேச்சுவார்த்தையின் முடிவு :

   இடைநிலை ஆசிரியர்களுடன் உயர் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இரண்டு முறை நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. தற்போது வரையில் 5கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. தாற்காலிய பணி வழங்குகின்றோம் என்றும் அரசிடம் நிதி இல்லை என்றும் பேச்சு வார்த்தையில் கூறப்பட்டது. 

தொகுப்பூதியம் கேட்கும் போராட்டகாரர்கள்:

  ஆசிரியர் தகுதித்தேர்வு அனைத்திலும் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு  பணி நியமன ஆணை வழங்கும் வரை போராட்டம் நிறுத்தப்போவது இல்லை. நிதி இல்லை என்றால் ( 10,000 )பத்தாயிரம் தொகுப்பூதியத்தில் பணி வழங்குங்கள். அரசின் நிதி பற்றாக்குறை சரியான பின் சம ஊதியம் எங்களுக்கும் வழங்குங்கள் என்று உறுதியுடன் போராட்டகாரர்கள் தெரிவித்து விட்டனர்.

வந்தே பாரத் sleeper coach அறிமுகம் ! புகைப்படங்களை வெளியிட்ட மத்திய அமைச்சர் !

முதல்வரிடம் கோரிக்கை வைத்த போராட்டகாரர்கள் :

    இரண்டாவது முறையாக போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்கள் ‘ முதல்வரிடம் பேசுகின்றோம் , பரிந்துரைக்கின்றோம் , போராட்டத்தினை கைவிடுங்கள் ‘  என்ற எந்த காரணத்தினையும் ஏற்பதாக இல்லை. தொகுப்பூதியத்துடன் பணி நியமன ஆணை வழங்குங்கள். இல்லை என்றால்  காவல்துறையிடம் இருக்கும் துப்பாக்கி வைத்து இங்கேயே சுட்டு விடுங்கள் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்துள்ளனர். 

இடைநிலை ஆசிரியர்கள் அரசிடம் வைத்த கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *