காங்கிரஸில் இருந்து மீண்டும் பாஜகாவுக்கு தாவிய ஜெகதீஷ் ஷெட்டர்.., அவரே அறிவித்த முக்கிய அறிக்கை!!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர்  ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெகதீஷ் ஷெட்டர் :

கர்நாடகா மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்தவர் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  முன்னாள் முதல்வர்  ஜெகதீஷ் ஷெட்டர். மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலைச் சந்தித்து தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படாத காரணத்தால் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதிருப்தியில் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் தற்போது டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருக்கிறார். தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் மீண்டும்  பாஜக சார்பில் போட்டியிட போகிறார் என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா எப்போது? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

Leave a Comment