ஜப்பான் திரை விமர்சனம் 2023ஜப்பான் திரை விமர்சனம் 2023

  ஜப்பான் திரை விமர்சனம் 2023. நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஜப்பான். தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகி இருக்கும் இப்படத்தின் கதை என்ன , ரசிகர்களுக்கு பிடித்ததா என்பதை காணலாம்.  

ஜப்பான் திரை விமர்சனம் 2023

  ஜப்பான் படத்தினை குக்கூ , ஜோக்கர் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கி உள்ளார். திரைப்படத்தில் கார்த்தி , அணு இம்மானுவேல் , ஜித்தன் ரமேஷ் , பவா செல்லதுரை , சுனில் , கே.எஸ்.ரவிக்குமார் , சந்திர சேகர் , விஜய் மில்டன் போன்ற பல திரை பிரபலங்கள் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கின்றார். மேலும் ஜப்பான் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது.

JOIN SKSPREAD WHATSAPP

  கொள்ளை அடிப்பதில் கில்லாடியாக இருப்பவர் தான் கார்த்தி ( ஜப்பான் ). இவர் கொள்ளை அடிக்காத இடங்களே இல்லை. ஜப்பான் ஒரு பெரிய நகைக்கடையில் 200 கோடி மதிப்பு பெரும் நகைகளை திருடி விடுகின்றான். எனவே ஒரு பக்கம் இவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மறுபுறம் ஜப்பானின் எதிரிகள் இவனை கொல்ல துரத்துகின்றனர். இறுதியில் கொள்ளை அடிப்பதில் வல்லவனான ஜப்பான் காவல் துறையினரிடம் சிக்கிக் கொள்வாரா. யார் இந்த ஜப்பான். ஜப்பான் கொள்ளை அடிப்பதற்கான காரணம் என்ன என்பதுடன் படம் முடிகின்றது. 

  ஒருவன் திருடனாக மாறுவதற்கு அவனுக்கு பல சூழ்நிலைகள் இடம் கொடுக்கின்றது. ஒரு புறம் தனிப்பட்ட செலவுகள் , பசி , மருத்துவ செலவு போன்றவைகளுக்காக திருடும் கூட்டம் இருக்கின்றது. மறுபுறம் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்று திருக்கின்றான். இவர்கள் மட்டும் திருடர்கள் அல்ல உலகில் வாழும் அனைவரும் திருடர்கள் தான் என்று ஜப்பான் படத்தின் கருத்தாக இருக்கின்றது. 

thalapathy 68 cast ! தளபதி 68 ல் இணைந்த எதிர்நீச்சல் சீரியல்  நடிகை ! 

   1. சண்டை காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டு உள்ளது.

   2. படம் விருறுவிறுப்பாக நகர்கின்றது.

   3. டைலாக்ஸ் எல்லாம் சிறப்பாக எழுதப்பட்டு இருக்கின்றது. 

   4. கதைக்கு ஏற்ற கதை மாந்தர்கள் தேர்வு அமைந்துள்ளது. 

   5. இனி பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் திறமையை இயக்குநர் ஜப்பான் படத்தின் மூலம் பெற்றுள்ளார். 

   6. இப்படத்தில் கார்த்தியின் உடை , நடிப்பு , டைலாக் எல்லாம் புது விதமாக இருக்கின்றது.

   7. அணு இம்மானுவேல் டைலாக் குறைவாகவே இருந்தாலும் இவர் இல்லையென்றால் படம் நல்லா இருக்காது. 

   8. சுனில் நடிப்பு படத்திற்கு ஏற்ற போல் நடித்துள்ளார்.

   9. இப்பட பாடல் ஜப்பான் படத்திற்கு மறுஉயிர் கொடுப்பதாக உள்ளது. ஜப்பான் திரை விமர்சனம் 2023

   1. படம் சூப்பர்.

   2. வேற லெவல்.

   3. கார்த்தி சீனகாரனை போல் நடித்து இருக்கின்றார். 

   4. காமெடி கலந்த சஸ்பென்ஸ் கதையாக இருக்கு.

   5. Background Music பயங்கரம்.

   6. குடும்பமாக பார்க்கலாம்.

ஜப்பான் படம் ஒரு சிறிய கருத்தை ரசிகர்களுக்கு புரியும் படி எளிமையாக எடுத்து இருக்கின்றார் இயக்குநர். ஜப்பான் படம் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கபப்டுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *