பல தடைகளை மீறி ரிலீஸுக்கு தயாரான "இந்தியன் 2".., எப்போது தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்!!பல தடைகளை மீறி ரிலீஸுக்கு தயாரான "இந்தியன் 2".., எப்போது தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்!!

தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது சினிமா கெரியரில் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், இன்றும் ரசிகர்களின் பேவரைட் படமாக இருந்து வரும் திரைப்படம் என்றால் அது கடந்த 2001ம் ஆண்டு வெளியான இந்தியன் தான். இப்பொழுது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சங்கர் தீவிரமாக எடுத்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் இன்று வரை முடிந்தபாடில்லை.

சமீபத்தில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியீட்டு நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஷூட்டிங்கை முடித்த படக்குழு படத்தை வருகிற ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து விரைவில் இந்தியன் பார்ட் 3 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *