கேரளாவில் ‘குழிமந்தி பிரியாணி’ சாப்பிட்ட 85 பேருக்கு உடல்நிலை பாதிப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – என்ன நடந்தது?

கேரளாவில் ‘குழிமந்தி பிரியாணி’ சாப்பிட்ட 85 பேருக்கு உடல்நிலை பாதிப்பு: கேரள மாநிலத்தில்  ‘குழிமந்தி பிரியாணி’  பேமஸா இருந்து வருகிறது. ஏமன் நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த பிரியாணியை  அம்மாநிலத்தில் பலர் விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக பெரும்பாலான அசைவ ஹோட்டலில் தான் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில்  ‘குழிமந்தி பிரியாணி’ பிரியாணியை சாப்பிட்ட  85 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கேரள மாநிலம் திருச்சூர் கொடுங்கல்லூரில் இருக்கும் ஒரு ஹோட்டலில்  நேரடியாகவும், பார்சல் மூலமாகவும் 85 பேர் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் திடீரென அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,  சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி இந்த பிரியாணியை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வந்துள்ளனர். ரிசல்ட் வந்த பிறகே 85 பேருக்கு உடல் நிலைக்கு என்ன ஆனது என்பது குறித்து தெரிய வரும் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. biriyani news – tamilnadu news – kerala news

IPL போட்டியில் தொடரும் அதிசயம் – இடது பக்கம் நின்றால் கப்பு கன்பார்ம் – அதிசயம் ஆனால் உண்மை!

Leave a Comment