இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்.., புத்தாண்டு முதல் சிலிண்டர் விலை ரூ. 450.., வெளியான முக்கிய அறிவிப்பு!!இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்.., புத்தாண்டு முதல் சிலிண்டர் விலை ரூ. 450.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

இன்றைய காலகட்டத்தில் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய பொருளாக சமையல் எரிவாயு இருந்து வருகிறது. ஆனால் சில மாதங்களாக கேஸ் சிலிண்டரின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளாகி வந்த நிலையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபையில் BJP கட்சி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை குறைப்பு என பல திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது.

தற்போது BJP ஆட்சியை பிடித்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி தற்போது சிலிண்டர் விலை 500 ஆக இருந்து வந்த நிலையில் 50 ரூபாய் குறைத்து 450 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி ஜனவரி 1 முதல் ராஜஸ்தானில் LPG சந்தாதாரர்களுக்கும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் 450 ரூபாய்க்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *