குழந்தை வயிற்றில் டியூப்., உயிருக்கு ஊசலாடும் பரிதாபம்.., அரசு மருத்துவரின் அலட்சியத்தை சுட்டி காட்டிய பெற்றோர்கள்!!குழந்தை வயிற்றில் டியூப்., உயிருக்கு ஊசலாடும் பரிதாபம்.., அரசு மருத்துவரின் அலட்சியத்தை சுட்டி காட்டிய பெற்றோர்கள்!!

இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ நல்ல மருத்துவர்கள் இருந்தாலும் கூட, சிலரின் அலட்சியத்தால் தவறுகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவரின் அலட்சியத்தால்  பிறந்த குழந்தையின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதாவது, ராமநாதபுரத்தை சேர்ந்த லோகநாதன் – மீனாட்சி என்ற தம்பதிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் 14ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த அந்த குழந்தைக்கு சர்க்கரை குறைவு, எடை குறைவு மற்றும் மூச்சு திணறல் காரணமாக கிட்டத்தட்ட 21 நாட்களுக்கு மேலாக மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வந்துள்ளனர்.

அதன் பின்னர் அந்த குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து  அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த குழந்தைக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் பெற்றோர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்த போது, சிகிச்சை நடந்த சமயத்தில் வயிற்றில் வைத்த டியூப் அகற்றாமல் இருப்பது தெரிய வந்தது. இதனால் குழந்தையின் உயிர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *