இந்த பொங்கல் நமக்கு செம்ம கலெக்சன்மா.., களைகட்டும் சந்தை.., ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்து அசத்தல்!!இந்த பொங்கல் நமக்கு செம்ம கலெக்சன்மா.., களைகட்டும் சந்தை.., ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்து அசத்தல்!!

பொதுவாக தீபாவளி, மாட்டு பொங்கல் பண்டிகைகளில் மக்கள் மாமிசம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் வரும் திங்கட்கிழமை உலகமெங்கும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து அதன் மறுநாள் மாட்டுப் பொங்கல் நாளில் பெரும்பாலான மக்கள் இறைச்சி சாப்பிட ஆடுகளை வாங்க ஆரம்பித்து விட்டனர். எனவே அந்நாளில் ஆடு, கோழி மக்களிடம் நல்ல வியாபாரம் ஆகும் என்பதால் விற்பனையாளர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நாமக்கல்லில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் கிட்டத்தட்ட 1.5 கோடிக்கும், அதே போல் பாவூர்சத்திரத்தில் ரூ 2 கோடிக்கு, ஆரணி கேளூர் மாட்டு சந்தையில் ரூ 2 கோடிக்கு மற்றும் மதுரை திருமங்கலத்தில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே ஒரு ஆட்டின் விலை 15 ஆயிரத்துக்கு வாங்கியுள்ள நிலையில், மாட்டுப்பொங்கல் அன்று மாமிசம் விலை கண்டிப்பாக அதிகரித்து காணப்படும் என சொல்லப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *