பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு வனத்துறை அனுமதிபாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு வனத்துறை அனுமதி

   தாமிரபரணி ஆற்றின் உற்பத்தி இடமான பாபநாசம் அணைக்கு மேல் இருக்கும் பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கிடையாது. தற்போது பாபநாசம் பாணதீர்த்தம் அருவி சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்தி செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன் படி வருகின்ற 18ம் தேதி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருக்கின்றது. பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு வனத்துறை அனுமதி.

பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு  வனத்துறை அனுமதி
பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு வனத்துறை அனுமதி

அருவி எங்கிருக்கின்றது :

   இயற்க்கையின் கொடைகளில் சிறப்பானதாக இருப்பது நீர்விழ்ச்சி அல்லது அருவிகள். இயற்கையின் ரசிகர்களுக்கு கொடையாக இருக்கும் அருவிகளில் பாணதீர்த்தம் அருவி திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அமைந்திருக்கின்றது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் பாபநாசம் அணையில் இருந்து 12கிலோமீட்டர் தொலைவில் கரையாறு அணையின் அருகில் அமைந்துள்ளது. 

அருவியின் எப்படி செல்ல வேண்டும் :

   திருநெல்வேலி , அம்பாசமுத்திரம் , தென்காசி போன்ற பகுதிக்கு வந்துவிட்டோம் என்றால் பேருந்துகள் பயன்படுத்தி கரையாறு அணை வந்துவிட்டோம் என்றால் பாணதீர்த்தம் அருவிக்கு 15 நிமிடங்கள் படகு சவாரி செய்து அருவிக்கு வந்து விடலாம். பாபநாசம் அணையில் இருந்தும் கட்டணம் செலுத்தி தனியார் படகுகள் மூலம் செல்லும் செயல்முறை தான் முன்னர் இருந்தது. 

அருவிக்கு செல்ல தடை :

   பாணதீர்த்தம் அருவியில் இருந்து விழும் நீரில் பல மருத்துவ குணம் நிறைந்து உள்ளது. எனவே ஒவ்வரு நாளும் பல சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து குளித்துவிட்டு செல்வர். மேலும் இங்கிருக்கும் புனித நீரினையும் மக்கள் எடுத்து செல்லும் பழக்கமும் இங்கு செல்லும் மக்களிடம் இருந்துள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் கொட்டும் நீர் விழுந்துகொண்டே தான் இருக்கும். ஆனால் விழும் நீரின் வேகம் அதிகமாக இருந்துள்ளது. மேலும் அருவி விழும் இடத்தின் அருகில் பல சுழற்சிகள் ஏற்படுகின்றது. இதன் காரணமாகவே சுற்றுலா பயணிகள் வருவதற்கு ஏற்ற இடம் கிடையாது என்று வனத்துறையினர் பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு தடை விதித்தது.

ஜி-20 மாநாட்டில் நடராஜர் சிலையின் விலை எவ்வளவு தெரியுமா !

வனத்துறை அனுமதி :

   பாணதீர்த்தம் அருவி இயற்கையின் பிரியர்களுக்கு ஏற்றதாக இருந்தாலும் மக்கள் செல்ல பல ஆண்டுகளாய் தடை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது அருவியை பார்வையிடுவதற்கு முண்டந்துறை வனத்துறை அனுமதி அளித்து இருக்கின்றது. வருகின்ற 18ம் தேதியில் இருந்து பாணதீர்த்தம் அருவிக்கு மக்கள் சென்று பார்வையிடலாம்.

கட்டணம் :

   பாபநாசம் அணைக்கு மேல் இருக்கும் பாணதீர்த்தம் அருவிக்கு மக்கள் செல்ல ஒரு நபருக்கு ரூ. 500 கட்டமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தினை முண்டந்துறை வனத்துறை அலுவலகத்தில் செலுத்தி நுழைவு சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். வனத்துறையே சுற்றுலா பயணிகளை 10 பேர் வரையில் அமரும் வாகனத்தில் கூட்டிக் சென்று மீண்டும் அலுவலகத்திற்க்கே கொண்டு வந்து விட்டுவிடுவார்.

என்னெவெல்லாம் பார்க்கலாம் :

   வனத்துறைக்கு கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு பெற்றுக்கொண்ட பின் வனத்துறை சார்பில் ஏற்ப்பாடு செய்துள்ள வாகனத்தின் மூலம் பயணம் தொடங்கும். 12 கிலோமீட்டர் தூரம் வரையில் அணையின் பக்கவாட்டில் இருக்கும் பாதையின் வழி பயணம் செய்து ” வியூ பாயிண்ட் ” , ” பாணதீர்த்தம் ” அருவியை பார்க்கலாம். 

பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு வனத்துறை அனுமதி

பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு  வனத்துறை அனுமதி

பார்வை நேரம் : 

   தினமும் காலை 8 மணி மணி முதல் மாலை 4 மணி வரையில் சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிடலாம்.

எங்கள் முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்

   அருவியின் அழகு என்பது சொல்லில் அடங்காதவை. ஆனால் கொள்ளையழகு நிறைந்திருக்கும் பாணதீர்த்தம் அருவியில் ஆபத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றது. எனவே பல ஆண்டுகள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லாத நிலையில் தற்போது அருவியை பார்வையிடுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்துள்ளது. இனி வரும் விடுமுறை தினங்களில் அருவிக்கு சென்று பார்வையிட்டு குடும்பத்துடன் மகிழ்ந்திருக்க புதிய சுற்றுலா தளம் வந்து விட்டது.  

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *