கேப்டனுக்கு கடைசியாக என்ன நடந்தது? உண்மையை உடைத்து பேசிய பிரேமலதா.., என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். அவருடைய இறப்பை தற்போது வரை யாராலும் ஈடுகட்ட முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. சமீபத்தில் நடிகர் சங்கம் சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில பல பிரபலங்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேம லதா தற்போது கேப்டனின் கடைசி நொடிகள் என்ன நடந்தது என்று முதல் முறையாக பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், எனது கணவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தோம். இதனை தொடர்ந்து டிசம்பர் 28ம் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டது. அப்போது நான் ஒன்னும் இல்லை வேகமாக வீட்டுக்கு போயிரலாம் என்று கூறினேன். ஆனால் அது அவரின் செவிக்கு கேட்கவில்லை. தொடர்ந்து மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். அதன் பின்னர் 2 மணி நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது என்று கூறியுள்ளார். 

திமுக MLA கருணாநிதி மகன் மருமகளை வளைத்து பிடித்த காவல்துறை.., விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்!!!

Leave a Comment