திமுக MLA கருணாநிதி மகன் மருமகளை வளைத்து பிடித்த காவல்துறை.., விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்!!!திமுக MLA கருணாநிதி மகன் மருமகளை வளைத்து பிடித்த காவல்துறை.., விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்!!!

வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக MLA கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கருணாநிதியின் மகன்,மருமகள் கைது :

திமுக MLA கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகிய இருவரும் வசித்து வந்த திருவான்மியூர் வீட்டில் தங்கி பணிபுரிந்து பணி பெண்ணை சித்ரவதை செய்ததுடன், சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக இருவர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும்  இவர்கள் இருவரும் தலைமறைவானதால் தனிப்படை அமைத்து போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இவர்கள் இருவரும் ஆந்திராவில் தங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இருவரையும் ஆந்திராவில் வைத்து போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கஞ்சா போதையில் காதலனை 108 தடவை கத்தியால் குத்திய காதலி.., நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *