ஐயோ.., காப்பாத்துங்க.., இரவு நேரத்தில் மாணவர்கள் அலறல்.., பள்ளி விடுதியில் திடீர் தீவிபத்து.., 13 பேர் பலி.., என்ன நடந்தது?ஐயோ.., காப்பாத்துங்க.., இரவு நேரத்தில் மாணவர்கள் அலறல்.., பள்ளி விடுதியில் திடீர் தீவிபத்து.., 13 பேர் பலி.., என்ன நடந்தது?

உலக நாடுகளில் தொடர்ந்து பயங்கரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு பள்ளி விடுதியில் தீப்பற்றி மாணவர்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீனாவின் முக்கிய பகுதியான ஹெனான் மாகாணத்திற்கு அருகே உள்ள யான்ஷான்பு கிராமத்தில் யிங்காய் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பள்ளி விடுதியில் திடீரென தீப்பற்றி வேகமாக பரவ தொடங்கியது.

தீயை அணைக்க மாணவர்கள் போராடிய நிலையில்,  போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறைக்கு பள்ளி நிர்வாகம் தகவல் கொடுத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் 13 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்று காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுத்தேர்வு மாணவர்களே., இனி தேர்வை பற்றி பயப்பட தேவையில்லை.., உங்களுக்காக வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *