அப்படி போடு.., "STR 48" படத்தில் சிம்புக்கு ஜோடி இந்த பாலிவுட் நடிகையா? அப்ப ரொமான்ஸ்க்கு பஞ்சமே இருக்காது!! அப்படி போடு.., "STR 48" படத்தில் சிம்புக்கு ஜோடி இந்த பாலிவுட் நடிகையா? அப்ப ரொமான்ஸ்க்கு பஞ்சமே இருக்காது!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் நடிகர்களில் ஒருவர் தான் சிலம்பரசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் STR 48 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திற்காக வெளிநாட்டுக்கு சென்று பல கலைகளை கற்று வருகிறார் என்று சமீபத்தில் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கும் நடிகை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது சூப்பர் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் சிம்பு நடிக்கும் STR 48 திரைப்படம் முழுக்க முழுக்க வரலாற்று கதையை மையமாக வைத்து உருவாக இருப்பதால், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 

கனடா அரசு எடுத்த அதிரடி முடிவு.., திகைத்து நின்ற இந்திய மாணவர்கள்.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *