சூர்யாவின் மகள் தியா +2 தேர்வில் வாங்கிய மார்க் எத்தனை தெரியுமா? படிப்புல கில்லியா இருப்பாங்க போலயே?சூர்யாவின் மகள் தியா +2 தேர்வில் வாங்கிய மார்க் எத்தனை தெரியுமா? படிப்புல கில்லியா இருப்பாங்க போலயே?

சூர்யாவின் மகள் தியா +2 தேர்வில் வாங்கிய மார்க் எத்தனை தெரியுமா: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தியா தற்போது 12ம் வகுப்பு பொது தேர்வை எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சூர்யாவின் மகள் தியா படிப்பில் கெட்டி காரி என்று நிரூபித்துள்ளார். அட ஆமாங்க, நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தியா 600க்கு 581 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். சூர்யாவின் மகள் தியா +2 தேர்வில் வாங்கிய மார்க் எத்தனை தெரியுமா?

அதாவது தியா தமிழ் பாடத்தில் 96 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில்  97 மதிப்பெண்களும், கணிதம் பாடத்தில் 94 மதிப்பெண்ணும் , பிசிக்ஸ் பாடத்தில் 99 மதிப்பெண்களும், கெமிஸ்ட்ரி சப்ஜெக்ட்டில்  98 மதிப்பெண்ணும் , கம்ப்யூட்டர் சயின்ஸில் 97 மதிப்பெண்களும் எடுத்து மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு 581 மார்க் வாங்கியுள்ளார். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஏனென்றால் தற்போது வெறும் 16 வயதே ஆகிறது. அவர் எப்படி 12ம் வகுப்பு படிக்க முடியும். அதுமட்டுமின்றி ஏற்கனவே 10 வகுப்பு பொது தேர்வு மார்க் குறித்து தவறான தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா எம்.பி பிரிட்டானி லாகாவுக்கு பாலியல் துன்புறுத்தல் – மர்ம கும்பல் வெறிச்செயல் – போலீஸ் விசாரணை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *