டைட்டானிக் பட கப்பலின் கேப்டன் பெர்னார்ட் ஹில் காலமானார் -  அதிர்ச்சியில் மிதந்த ரசிகர்கள்!!டைட்டானிக் பட கப்பலின் கேப்டன் பெர்னார்ட் ஹில் காலமானார் -  அதிர்ச்சியில் மிதந்த ரசிகர்கள்!!

டைட்டானிக் பட கப்பலின் கேப்டன் பெர்னார்ட் ஹில் காலமானார்: உலக அளவில் வெளியான படங்கள் சிலவற்றையே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அதில் ஒன்று டைட்டானிக் திரைப்படம் என்றால் அது மிகையாகாது. இப்படம் கடந்த 1997 ம் ஆண்டு வெளியான நிலையில் , தற்போது 27 வருடங்கள் கடந்த போதிலும் இப்பொழுதும் டிவியில் போட்ட மக்கள் விரும்பி பார்ப்பதுண்டு. சமீபத்தில் தான் இப்படம் ஆங்கிலத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியான போது கிடைத்த வரவேற்பு போன்ற இப்போதும் கிடைத்தது. இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

டைட்டானிக் பட கப்பலின் கேப்டன் பெர்னார்ட் ஹில் காலமானார்

குறிப்பாக இப்படத்தில் ஹீரோ ஹீரோயினாக நடித்த டி காப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் இன்றளவும் உலகளவில் பெரும் நடிகர்களாக வளம் வருகிறார்கள். இவர்களை போல் இந்த படத்தில் கொண்டாடப்படும் மற்றொரு நடிகர் என்றால் அது நடிகர் பெர்னார்ட் ஹில் தான். அவர் டைட்டானிக் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு  79 வயதாகும் நிலையில் திடீரென மரணமடைந்துள்ளார். அவரின் இறப்புக்கு நடிகர்கள் முதல் ரசிகர்கள் வரை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

சூர்யாவின் மகள் தியா +2 தேர்வில் வாங்கிய மார்க் எத்தனை தெரியுமா? படிப்புல கில்லியா இருப்பாங்க போலயே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *