Raayan Movie:  தனுஷின் "ராயன்" படத்தின் புதிய அப்டேட் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!Raayan Movie:  தனுஷின் "ராயன்" படத்தின் புதிய அப்டேட் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

Raayan Movie:  தனுஷின் “ராயன்” படத்தின் புதிய அப்டேட்: நடிகர் தனுஷ் நடிப்பை தாண்டி தற்போது தனது கவனத்தை டைரக்ஷன் பக்கம் திருப்பியுள்ளார். இவர் இயக்கிய பா பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அவர் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அதில் ஒரு திரைப்படம் தான் ராயன். இப்படத்தில் அவருடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா தாஸ், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இப்படம் அடுத்த மாதம் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ராயன் படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனுஷ் நடித்து இயக்கும் ராயன் படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சாங் வருகிற மே 9ம் தேதி வெளியாகும் எனவும், முழு படம் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு போஸ்டர் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நிலவுக்கு “என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி –  வானிலை எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் நடந்த விபரீதம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *