விஜய்யின் கோட் படத்தில் இணைந்த பிரபல நடிகர் - அப்புறம் என்ன தியேட்டர் ஸ்கிரீன் கிழிய போகுது?விஜய்யின் கோட் படத்தில் இணைந்த பிரபல நடிகர் - அப்புறம் என்ன தியேட்டர் ஸ்கிரீன் கிழிய போகுது?

விஜய்யின் கோட் படத்தில் இணைந்த பிரபல நடிகர்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். இப்படத்துடன் அவருடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். வசூலில் கிங் மேக்கராக இருந்து வரும் விஜய் அடுத்த இரண்டு படங்களுடன் அரசியலில் இறங்க இருப்பதால் கோட் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்திற்கு மேலும் பலத்தை கூட்டும் விதமாக மறைந்த கேப்டன் விஜயகாந்த் AI மூலம் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

விஜய்யின் கோட் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய நட்சத்திரம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது வேற யாரும் இல்லை, அடுத்த தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் தான் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கேட்ட விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் அதிர்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் திளைத்து போய் உள்ளனர். தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ‘எஸ் கே 23’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நொய்டாவில் சிறுமியை கடித்துக் குதறிய நாய்- வெளியான ஷாக்கிங் வீடியோ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *