அட்ரா சக்க.., “சூர்யா 43” படத்தில் இணைந்த வாரிசு நடிகை.., வெளியான முக்கிய தகவல்!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வரும் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இதை தொடர்ந்து வெற்றி மாறனின் வாடிவாசல் ஷூட்டிங்கில் செல்ல இருக்கிறார். அதுமட்டுமின்றி அவரின் 43 வது படத்தை சூரரை போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்க இருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து விஜய் வர்மா, துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் சூர்யா 43 படத்தில் அவருக்கு ஜோடியாக மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.  

அப்படி போடு.., செகண்ட் படத்துக்கு ரெடியான லெஜெண்ட் அண்ணாச்சி.., இயக்குனர் யார் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு!!

Leave a Comment