வாக்களிக்க இலவச வாகன வசதி? ஒரு கால் பண்ணா போதும் Pickup Drop கன்பார்ம்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!வாக்களிக்க இலவச வாகன வசதி? ஒரு கால் பண்ணா போதும் Pickup Drop கன்பார்ம்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வாக்களிக்க இலவச வாகன வசதி: தமிழகம் முழுவதும் நாளை(ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் வாக்களிக்க வரும் மக்களுக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. குறிப்பாக பெண்களின் வசதிக்காக சென்னையில் உள்ள 16  பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் பலவித வசதிகளை வைத்து ஏற்பாடு செய்துள்ளது. சொல்ல போனால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் நீண்ட நேரம்  வரிசையில் நிற்க தேவையில்லை.

வாக்களிக்க இலவச வாகன வசதி?

அவர்களுக்கு என்று தனி வரிசை என பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது இன்னொரு வசதியையும் ஏற்பாடு செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதாவது நாளை நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க இருக்கும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் வாகன வசதி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கள்ளழகர் திருவிழாவில் எல்லாரும் தண்ணீர் பீய்ச்சலாம்? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *