வாக்களிக்க திரளும் சினிமா நட்சத்திரங்கள் - யார் யார் எந்த தொகுதியில் ஓட்டு போடுகிறார்கள் தெரியுமா?வாக்களிக்க திரளும் சினிமா நட்சத்திரங்கள் - யார் யார் எந்த தொகுதியில் ஓட்டு போடுகிறார்கள் தெரியுமா?

வாக்களிக்க திரளும் சினிமா நட்சத்திரங்கள்: உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மக்களவை தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சாதாரண மக்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை வரிசையில் நின்று ஓட்டு போடுவார்கள். அப்படி எந்தெந்த நடிகர்கள் எந்த தொகுதியில் ஓட்டு போட இருக்கிறார்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.  

வாக்களிக்க திரளும் சினிமா நட்சத்திரங்கள்

பிரபல நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை பனையூரில் வாக்குப்பதிவு செய்ய இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தேனாம் பேட்டையிலும்,  கமல் சென்னை ஆழ்வார்பேட்டையில் வாக்களிக்க உள்ளார்கள். அதே போல் அஜித் சென்னை நீலாங்கரையிலும், சூர்யா சென்னை தியாகராய நகர் விஜயலக்ஷ்மி நகரில் வாக்களிக்க இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி  விஜயகாந்த் குடும்பத்தினர், விஜய் ஆண்டனி, ஏ. ஆர் முருகதாஸ் ஆகியோர் சாலிகிராமத்தில் அமைந்திருக்கும் பள்ளியில் வாக்களிக்க உள்ளார்கள். மேலும் வரலட்சுமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் கோட்டூர்புரம் அரசு பள்ளியிலும், கருணாகரன் திருவான்மியூரில் உள்ள அட்வென்ட் கிறிஸ்டியன் பள்ளியிலும் , சமுத்திரகனி சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளியிலும், கவிஞர் வைரமுத்து சென்னை சூளைமேட்டில் வாக்களிக்க இருக்கிறார்கள்.

வாக்களிக்க இலவச வாகன வசதி? ஒரு கால் பண்ணா போதும் Pickup Drop கன்பார்ம்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *