தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இலவச இணைய வசதி - மாணவர்கள் மகிழ்ச்சி!!தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இலவச இணைய வசதி - மாணவர்கள் மகிழ்ச்சி!!

தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இலவச இணைய வசதி: தமிழகத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் கல்வி  திறனை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இணைய வசதியை ஏற்படுத்த திட்டம் தீட்டியுள்ளது. அதற்கான பணிகளில் தற்போது அரசாங்கம் இறங்கியுள்ளது. இந்த திட்டத்திற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது  தமிழகத்தில் கிட்டத்தட்ட 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இயங்கி வருகிறது. இதில் 5907 பள்ளிகளுக்கு மட்டுமே இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போல 6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3267 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தொடக்க பள்ளி தமிழகத்தில் 24,338 இருக்கும் நிலையில் அதில்  8,711 தொடக்கப் பள்ளியில் மட்டுமே இணைய சேவை பொருத்தப்பட்டுள்ளது.  மேலும் இணைய வசதி பொருத்தாத பள்ளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இணைய வசதி பொருத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்க ரூ.519.73 கோடி செலவில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும், ரூ.455.32 கோடி செலவில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இலவச இணைய வசதி

கோவிட் தடுப்பூசியை திரும்ப பெற்ற அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் – இதுவே ரொம்ப லேட் மக்களே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *