அடக்கடவுளே.., “தளபதி 68” பட முக்கிய பிரபலம் திடீர் உயிரிழப்பு.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
வெள்ளித்திரையில் நம்பர் 1 நடிகராக இருந்து வரும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு இசையமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா.
இந்நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் விதமாக ஒரு துக்கமான செய்தியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது வெங்கட் பிரபு தனது x பக்கத்தில் தளபதி 68 படத்தின் தயாரிப்பு நிறுவனம் AGS குழுவின் ஒருவரான ஜாய்சன் உயிரிழந்துள்ளார் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தற்போது அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.