போடா வெளிய.., தளபதி விஜய் மீது செருப்பை தூக்கி எறிந்த மர்ம நபர்.., துக்க வீட்டில் என்ன நடந்தது? போடா வெளிய.., தளபதி விஜய் மீது செருப்பை தூக்கி எறிந்த மர்ம நபர்.., துக்க வீட்டில் என்ன நடந்தது?

கேப்டன் விஜயகாந்த் நேற்று இறந்த நிலையில் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல பிரபலங்கள் நேரில் சென்றனர். அந்த வகையில் நேற்று இரவு தளபதி விஜய்யும் சென்று கேப்டனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி திரும்பும் போது கூட்ட நெரிசலில் சிக்கினார். அப்போது அங்கிருந்தவர்கள் விஜய்யை பார்த்து வெளியே போடா? என்று கத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் விஜய் மீது செருப்பை தூக்கி எறிந்துள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்ன தான் விஜய்யை பிடிக்கவில்லை என்றாலும் துக்க வீட்டுக்கு வந்த நபரை செருப்பால் எரிவது தவறு என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அப்படி தளபதி உங்களுக்கு என்னதான் தீங்கு செய்து விட்டார் என்று தளபதி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏன் இந்த வன்மம் என்றும், விஜயகாந்தை பார்த்து அழுத விஜய்க்கு அங்கிருந்தவர்கள் கொடுக்கும் மரியாதை இவ்வளவு  தானா என்று ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *