தவமாய் தவமிருந்து சீரியல் தவமாய் தவமிருந்து சீரியல்

தவமாய் தவமிருந்து சீரியல். மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட 500 எபிசோடுகளை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இதன் கிளைமாக்ஸ் நெருங்கியுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

ஜீ தமிழ் தவமாய் தவமிருந்து சீரியல் ! எண்டு கார்டு போட்டாச்சு !

 தவமாய் தவமிருந்து சீரியல்

கடந்த இரண்டு மாதங்களாக இந்த சீரியலை பற்றிய வதந்திகள் பரவியது. ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. அதில் நடிப்பவர்களும் இதனை மறுத்து வந்தனர்.

இந்த நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த சீரியல் அக்டோபர் எட்டாம் தேதியுடன் முடிய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த வாரம் சனிக்கிழமை கடைசி எபிசோடாக அமையும். இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த வாரத்திற்குள் முடிந்துவிடும்.

விரைவில் முடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ! முக்கிய பிரபலம் விலகுவதால் !

தவமாய் தவமிருந்து திரைப்படம் பார்த்திருப்பீர்கள். நம் சேரன் நடித்த படம் தான்.அந்த படத்தில் பெற்றோர்களின் நிலைமை சேரன் நன்றாக காட்டுவார். வயதான பின்பு அவர்கள் படும் கஷ்டங்களை காட்டுவார். பிள்ளைகள் பெற்றோர்களை எப்பிடி பார்த்து கொள்கின்றனர் என்பதை காட்டுவார். இந்த சீரியலில் அதைவிட ஒரு படி மேல் காட்டியிருப்பார் இயக்குனர்.

இந்த செய்தி இதன் ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது. வயதானவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்திருப்பார். அது குடும்பத்தில் உள்ள வயதானவர்களை கவர்ந்தது. ஆனால் டி ஆர் பி யில் சற்று பின்தங்கி உள்ளது. இதுவும் கிளைமாக்ஸ் வர ஒரு காரணம் தான். இந்த நிலையில் சீசன் 2 வருமா வராதா. காத்திருந்து பார்க்கலாம். மேலும் இதற்கு பதில் புது சீரியல் வருமா என்ற தகவலும் கூறப்படவில்லை.

எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்

எது எப்படி ஆனாலும் இந்த சீரியல் முடிவுக்கு வருவது உறுதி. இதன் ரசிகர்கள் வருத்தம் குறைய வேண்டும் என்றால் பக்கம் இரண்டு வந்தால் மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *