தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023)தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023)

தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023) செய்யப்படும் பகுதிகள். மின்வாரிய பணியாளர்கள் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகளை சில துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள உள்ளனர். எனவே கரூர் , விருதுநகர் , பெரம்பலூர் , ராமநாதபுரம் , கோயம்புத்தூர் , ஈரோடு மற்றும் தருமபுரி போன்ற மாவட்டங்களில் இருக்கும் துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023) செய்யப்படும் பகுதிகள் ! 

தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023)

கரூர் – கணியாலம்பட்டி துணை மின்நிலையம்:

   கரூர் மாவட்டம்  கணியாலம்பட்டி துணை மின்நிலையம் சார்ந்த ஜெகதாபி , பாலபட்டி , வில்வமரத்துப்பட்டி , கணியாலம்பட்டி , வீரியபட்டி , சுண்டுகுழிப்பட்டி , முத்துரெங்கம்பட்டி , பண்ணப்பட்டி , காளையப்பட்டி , வரவாணி வடக்கு , மேலப்பாகுத்தி , சி.புதூர், வெரளிப்பட்டி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படும்.

JOIN WHATSAPP CHANNEL

விருதுநகர் மல்லாங்கிணறு துணை மின்நிலையம் :

  விருதுநகர்  மாவட்டம் மல்லாங்கிணறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் .

துணை மின்நிலையம் – விருதுநகர் :

   விருதுநகர் துணை மின் நிலையத்தில் இருக்கும் பாண்டியன் நகர் மற்றும் இப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும்.

பெரம்பலூர் – கூத்தூர் துணை மின்நிலையம் :

   பெரம்பலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின்நிலையம் சார்ந்த அல்லிநகரம் , பிலிமிசை, இண்டஸ்ட்ரியல் , நல்லூர் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணியில் இருந்து  மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட்டு இருக்கும்.

  ராமநாதபுரம் – கொத்தமங்கலம் துணை மின்நிலையம் :

   ராமநாதபுரம் மாவட்டம் கொத்தமங்கலம் துணை மின்நிலையம் சார்ந்த கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம் போன்ற பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் காலை காலை 9 முதல் மாலை 4 வரை மின்விநியோகம் இருக்காது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு 2023 ! முழு விவரம் இதோ !

கோயம்புத்தூர் – கலிவேலம்பட்டி துணை மின்நிலையம் :

   கோயம்புத்தூர் மாவட்டம் கலிவேலம்பட்டி துணை மின்நிலையம் சார்ந்த அண்ணா நகர், குமரன், செம்மிபாளையம், சுக்கபாளையம், பெரும்பாளி, உஞ்சபாளையம், விகாஷினி, அய்யம்பாளையம் போன்ற பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மின்தடை இருக்காது.

 ஈரோடு – மடம்பாளையம் துணை மின்நிலையம் :

   ஈரோடு மாவட்டம் மடம்பாளையம் துணை மின்நிலையம் சார்ந்த பெட்டத்தபுரம் , தண்ணீர் பந்தல் , கோட்டை பிரிவு , ஒன்னிபாளையம் சாலை , அறிவொளி நகர் , சீனா மடம்பாளையம் , மடம்பாளையம் , செல்வபுரம் , சாந்தி மேடு , பாரதி நகர் , சாம நாய்க்கன்பாளையம் சாலை , கண்ணர்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையுலும் மின்விநியோகம் ரத்து செய்யப்படும்.

தருமபுரி – பொம்மிடி துணை மின்நிலையம் :

    பொம்மிடி துணை மின்நிலையம் தொடர்புடைய பொம்மிடி , அஜ்ஜம்பட்டி , மோரூர் , பள்ளிப்பட்டி பி.சி.பட்டி , திப்பிரெட்டிஹள்ளி , ஜாலியூர் , மண்லூர் , முத்தம்பட்டி பொம்மிடி , துரிஞ்சிப்பட்டி எச்டி சேவைகளுக்கு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 முதல் மாலை 4 வரை மணி வரை மின்தடை ரத்து செய்யப்படும்.

தருமபுரி – முத்தம்பட்டி:

    முத்தம்பட்டி துணை மின்நிலையம் சார்ந்த ஏ.எம்.கோட்டை , முத்தம்பட்டி , கருங்கல்பாளையம் ரேகடஹள்ளி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 முதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படும்.

 மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்த தகவல்களை மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது. இவைகள்  இல்லத்தரசிகள்  மற்றும் மின்சாரம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இது முன் எச்சரிக்கையாக இருக்கும். சில நேரங்களில் மின்சாரம் ரத்து செய்யப்படாமல் இருக்க வாய்ப்புகளும் உண்டு.

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *