கிராம சுகாதார செவிலியர் நேரடி நியமனம்கிராம சுகாதார செவிலியர் நேரடி நியமனம்

  கிராம சுகாதார செவிலியர் நேரடி நியமனம் அரசாணைக்கு தடை. தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதம் கிராம சுகாதார செவிலியர் பணிக்கு நேரடி பணி நியமன அரசாணைக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கிராம சுகாதார செவிலியர் நேரடி நியமனம் அரசாணைக்கு தடை – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

கிராம சுகாதார செவிலியர் நேரடி நியமனம்

நேரடி பணி நியமனம் :

  தமிழ்நாட்டில் மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் கிராம சுகாதார செவிலியர் பணிக்கு சுமார் 2,250 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.  இப்பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்கள் கல்வி மதிப்பெண்களின் படி நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டவர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். 

JOIN WHATSAPP CHANNEL

அரசாணையை எதிர்த்து மனு தாக்கல் :

  தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து சிவகங்கை மாவட்டத்தினை சேர்ந்த தெய்வானை மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

  1. 2009ல் அங்கன்வாடி ஊழியராக பணியில் சேர்ந்தேன்.

  2. 2017ல் மூத்த அங்கன்வாடி ஊழியராக பதவி உயர்வு பெற்றேன்.

  3. பின்னர் கிராம சுகாதார செவிலியர் பயிற்சி 2 ஆண்டுகள் பெற்று சான்றிதழ் பெற்று உள்ளேன். 

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (31.10.2023) ! இந்த பகுதிகளில் நாளை பவர் கட் ! 

  4. கிராம சுகாதார பணிக்கு தகுதியான பயிற்சி பெற்றவர்கள் தான் பணி செய்ய முடியும். தற்போது அரசு கிராம சுகாதார செவிலியர் பணிக்கு கல்வி தகுதியை அரசே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

  5. தகுதி இல்லாதவர்கள் நேரடி பணி நியமனம் செய்வது முறையானது கிடையாது. இதனால் தகுந்த கல்வி தகுதியை பெற்றவர்கள் பாதிக்கப்படுவர் . 

  6. எனவே கிராம சுகாதார பணிகளுக்கு உரிய கல்வி தகுதியை பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. கிராம சுகாதார செவிலியர் நேரடி நியமனம் அரசாணைக்கு தடை

அரசாணைக்கு இடைக்கால தடை :

  தெய்வானை தாக்கல் செய்திருந்த மனு நேற்று நீதிபதி S.M.சுப்பிரமணியம் மற்றும் லட்சுமி நாரயணன் விசாரித்தனர். கிராம சுகாதார பணிக்கு தகுந்த பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே காலிப்பணியிடங்களில் நியமனம் செய்ய தகுதியானவர்கள். எனவே இந்த காலிப்பணியிடங்களுக்கு அரசு வெளியிட்டு உள்ள நேரடி பணி நியமன உத்தவிற்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தவினை பிறப்பித்து உள்ளது. இத்துறை சார்ந்த அதிகாரிகள் வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்க்காக 2 வாரங்கள் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *