விருதுநகர் மாவட்ட அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023விருதுநகர் மாவட்ட அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023

  விருதுநகர் மாவட்ட அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு இயங்கி வருகின்றது. இதன் கீழ் செயல்படும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

விருதுநகர் மாவட்ட அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023

  விருதுநகர் மாவட்ட TNRDல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் , தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL GET MORE JOBS

  விருதுநகர் மாவட்ட TNRDன் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  அலுவலக உதவியாளர் ( Office Assistant ) பணியிடங்கள் மேற்கண்ட துறைகளில் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  ஒரு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.

  வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு அரசின் வழிமுறைகளின் கீழ் செயல்படும் ஏதேனும் ஒரு கல்வி நிலையங்களில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

வருமான வரித்துறை Director வேலைவாய்ப்பு 2023 ! 2,16,000 வரை சம்பளம் !

  1. பொதுப்பிரிவினர் – 18 முதல் 32 

  2. பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 18 முதல் 34

  3. பழங்குடியினர் , ஆதிதிராவிடர் – 18 முதல் 37 வயது வரையில் இருக்கும் தகுதியான நபர்கள் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

  ரூ. 15,700 முதல் 50,000வரையில் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக அரசின் வழிமுறைகளின் படி வழங்கப்படும்.விருதுநகர் மாவட்ட அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023.

  17.11.2023 முதல் 07.12.2023 வரையில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

  மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தபால் அல்லது அலுவலகத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

  ஆணையர் ,

  ஊராட்சி ஒன்றியம் ,

  வத்திராயிருப்பு ,

  விருதுநகர் மாவட்டம் ,

  தமிழ்நாடு .

  1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் 

  2. மொபைல் எண் 

  3. பிறப்பு சான்றிதழ் 

  4. இருப்பிட சான்றிதழ் 

  5. ஆதார் 

  6. கல்வி சான்றிதழ் 

  7. சாதி சான்றிதழ் 

  8. வேலைவாய்ப்பு பதிவு விவரம் 

  9. முன்னுரிமை சான்றிதழ் 

இவைகளின் ஜெராக்ஸ் உடன் விண்ணப்பபடிவம் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

  1. மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர் மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். 

  2. முன்னுரிமை சான்றிதழ் இணைக்கப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

  விருதுநகர் மாவட்ட TNRDல் காலியாக இருக்கும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *