ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை.., 18 மணி நேர போராட்டம் பிறகு மீட்பு.., கர்நாடகாவில் திக் திக் நிமிடம்?ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை.., 18 மணி நேர போராட்டம் பிறகு மீட்பு.., கர்நாடகாவில் திக் திக் நிமிடம்?

16 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை 18 மணி நேரம் போராடி மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குழந்தையை உயிருடன் மீட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் தடுக்கி விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவிற்கு உட்பட்ட லச்சியான் என்ற கிராமத்தின் ஒரு பகுதியில் உள்ள 16 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அதாவது நேற்று சரியாக மாலை 5 மணி நேரத்தில் விழுந்த அந்த குழந்தையை மீட்க, மீட்பு குழுவினர் 6.30 மணிக்கு பணியை ஆர்மபித்தனர். இது குறித்து காவல்துறை கூறியதாவது, ” குழந்தை விளையாடுவதற்கு வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும், அப்போது தவறி கிணற்றுக்குள் விழுந்து உள்ளது.

மேலும் அக்குழந்தை தலைக்குப்புற விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது மீட்பு பணியினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் என்று கூறியுள்ளார். இந்நிலையில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குழந்தையை  கிட்டத்தட்ட 18 மணி நேரத்திற்கு பிறகு உயிரோடு காப்பாற்றியுள்ளனர். குழந்தை மீட்கப்பட்ட உடன் உடனடியாக இண்டியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற ஆம்புலன்ஸ் ஒன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. கடந்தாண்டு, பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள குல் கிராமத்தில் 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சேப்பாக்கத்தில் நடைபெறும்  CSK vs KKR போட்டி.., நாளை ஆன்லைன் டிக்கெட் விற்பனை.., சென்னை ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *