உத்தரகாண்ட் சுரங்க விபத்துஉத்தரகாண்ட் சுரங்க விபத்து

உத்தரகாண்ட் சுரங்க விபத்து. உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தக்காசி மாவட்டத்தில் சுரங்கம் தோன்றும் பணியில் 41 தொழிலாளர்கள் இருந்தனர். கடந்த 12ஆம் தேதி மண்சறிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்களும் சுரங்கத்துக்குள் சிக்கினர். அவர்களை மீட்க பல ஆராய்ச்சிகள் நடந்தது. பல வல்லுநர்கள் இதில் களம் இறக்கப்பட்டனர். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு சற்று நேரத்தில் தொழிலார்கள் மீட்கப்பட உள்ளனர்.

உத்தரகாண்ட் சுரங்க விபத்து

சுரங்கத்தின் நுழைவு வாயிலில் இருந்து 86 மீட்டர் தொலைவில் தொழிலார்கள் சிக்கி இருந்தனர். கிட்டத்தட்ட 17 நாட்களாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. முதலில் கிடைமட்டமாக தோண்டப்பட்டது. அதில் குழாய் அமைத்து மீட்க முடிவு எடுத்தனர். இதற்காக ராட்சத எந்திரங்கள் வர வைக்கப்பட்டது. கடினமான பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் சிரமமாக இருந்தது. பல எந்திரங்கள் பழுதுபட்டன.

JOIN WHATSAPP CHANNEL GET LATEST UPDATE

இறுதியாக அமெரிக்க எந்திரம் பயன்படுத்தப்பட்டது. அதன் பெயர் ஆகர் ஆகும். ஆகர் மிக விரைவாக துளையிட்டது . மீட்பு பணியும் வேகமாக நடந்தது. தொழிலாளர்கள் 57 மீட்டர் இடைவெளியில் சிக்கி இருந்தனர் என்று சொல்லப்பட்டது. ஆனால் 86 மீட்டர் இடைவெளி இருந்தது. ஆதார் எந்திரம் 47 மீட்டர் வரை துளையிட்டது. இதனால் இதனால் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆதர் எந்திரத்தின் பிளேடுகள் உடைந்தது. இதனால் மீட்பு பணி மேலும் பின்னடைவு அடைந்தது. உடைந்த பிளேடுகள் உள்ளேயே சிக்கிக் கொண்டன. ஆதர் இந்திரம் பழுதடைந்ததால் அதுவும் தோல்வியில் முடிந்தது. இதனால் மீட்பு குழுவினர் மாற்று வழியை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. இதனால் சிக்கியுள்ள பிளேடுகளை வெட்டி எடுக்க முடிவு செய்தனர். வெட்டி எடுத்த பின்னர் துளையிட முடிவு செய்தனர்.

அதாவது மீதமுள்ள 10 முதல் 12 மீட்டரை ஆட்கள் கொண்டு துளையிட முடிவு செய்தனர். ஆனால் பிளேடுகள் உடைப்பது சவாலாக இருந்தது. இதனால் பிளாஸ்மா கட்டர் என்ற நவீன எந்திரத்தை ஹைதராபாத்தில் இருந்து வரவழைத்தனர். தற்பொழுது பிளேடுகள் உடைக்கப்படும் பணி நடந்து வருகிறது. ஆனால் மீட்பு குழுவினர் தாமதிக்காமல் மாற்று வழியை தேர்ந்தெடுத்தனர்.

சுரங்கத்தின் மேற்பகுதியில் செங்குத்தாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்க முடிவு எடுத்தனர். இந்திய ராணுவம் முதல் அனைத்து மீட்பு குழுவினரும் இதில் ஈடுபட்டு வந்தனர். சுரங்கத்தின் மேற்பரப்பிலிருந்து கீழே வரை 86 மீட்டருக்கு துளையிட வேண்டி இருந்தது. நேற்று வரை 31 மீட்டருக்கு துளையிடப்பட்டது. இன்று காலை முதல் துளையிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (27.11.2023) ! உங்க ஏரியா இருக்க போது பாருங்க !

சுரங்கப்பாதைக்குள் ஆட்கள் துளையிடப்படும் பணி தொடங்கியது அதற்காக எலி வளை தொழிலாளர்கள் என்று அழைக்கப்படும் ஆறு சுரங்க பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இடுபாடுகளுக்குள் உள்ள 800 மில்லி மீட்டர் விட்டம் உள்ள குழாய்க்குள் சென்று மண்வெட்டியால் இடுப்பாடுகளை அகற்றுவர். எலி போன்று சிறிய இடத்திலும் துளையிடும் வல்லமை படைத்தவர்கள். இதனால் அவர்கள் எலி வளை தொழிலார்கள் என்று அழைக்கப்பட்டனர். உத்தரகாண்ட் சுரங்க விபத்து.

இது சற்று தாமதமாகும் வழி என்றாலும் வேறு வழி இல்லை என்று அதிகாரிகள் கூறினர். கிடைமட்ட துளையிடல் மற்றும் மேல்மட்ட துடைதல் எது முதலில் முடியும் என்பதைப் பொறுத்து தொழிலாளர்கள் மீட்கப்படுவர் என்றனர். ஆனால் எது முதலில் முடிவடையும் என்று அவர்களால் கூற முடியவில்லை. ஏனென்றால் பாறைகள் எங்கு தடங்களை ஏற்படுத்தும் என்று யாராலும் தெரிவிக்க முடியாது. இந்த நிலையில் மேல் மட்டத்துளையிடும் முழுமையாக முடிவடைந்து குழாய்கள் அமைக்கப்பட்டது.

மீட்பு படையினர் தொழிலாளர்களை மிக்க உள்ளே சென்றனர். தொழிலாளர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உறவினர்கள் அங்கு குவிந்து உள்ளனர். அணைத்து பத்திரிகை நண்பர்கள், அரசியல் பிரமுககர்கள் , அனைவரும் களத்தில் உள்ளனர். 17 நாட்களுக்கு பிறகு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படும் செய்தி அனைவர்க்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *