வாவா சுரேஷுக்கு பாம்பு பிடிக்க லைசென்ஸ்வாவா சுரேஷுக்கு பாம்பு பிடிக்க லைசென்ஸ்

  வாவா சுரேஷுக்கு பாம்பு பிடிக்க லைசென்ஸ் . கேரளாவில் பாம்புகளை லாவகரமாக பிடிப்பதில் பிரபலமானவர் வாவா சுரேஷ். வனத்துறையினரின் விதிமுறைகளுக்கு வாவா சுரேஷ் உறுதி அளித்து இருப்பதால் லைசென்ஸ் வழங்க முடிவு செய்து உள்ளது.

வாவா சுரேஷுக்கு பாம்பு பிடிக்க லைசென்ஸ் ! வனத்துறை முடிவு ! 

வாவா சுரேஷுக்கு பாம்பு பிடிக்க லைசென்ஸ்

பாம்புகளின் மன்னன் :

  கேரளாவில் பாம்புகளின் மன்னன் என்று அழைக்கப்படுபவர் கேரளாவை சேர்ந்தவர் வாவா சுரேஷ். சிறு வயதில் இருந்து இவருக்கு பாம்புகள் என்றாலே பிடிக்கும். முதன் முதலில் கிங் கோப்ரா பாம்பை உபகரணங்கள்  ஏதும் இல்லாமல் 12 வயதில் பிடித்தார். பள்ளி படிப்பை முடித்த உடன் பாம்பு பிடிக்கும் பணியை செய்து வருகின்றார். பாம்புகளுக்கு இடையிறு ஏற்படுத்தாமல் பிடிப்பதால் இவருக்கு கேரள அரசு ” அரசு பணி ” கொடுத்தது. ஆனால் அரசு பணி வேண்டாம் என்று சொல்லி பாம்புகளை பிடிப்பதை சேவையாக செய்து வருகின்றார். 

JOIN WHATSAPP CHANNEL

மக்கள் சேவை :

  தற்போது வரையில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாம்புகளை பிடித்து இருக்கின்றார். இதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பாம்புகளிடம் கடி வாங்கி இருக்கின்றார். இதில் 300க்கும் அதிகமான பாம்புகள் விஷம் கொண்டது. இதில் 5 முறைக்கும் மேல் ICUயில் அனுமதிக்கப்பட்டு இரண்டு முறை உயிருக்கும் போராடி இருக்கின்றார். 2012ல் கை விரல் எடுக்கப்பட்டது. அதன் பின்பும் பாம்புகளை பிடித்தும் யூடியூப் மூலம் வருமானம் பார்த்து வருகின்றார். பாம்புகளை பிடிப்பதில் அதிக பணம் கொடுத்தால் அவைகளை பயன்படுத்தி சேவை செய்தும் வருகின்றார். 

ஹிர்திக் பாண்டியா நியூசிலாந்து எதிரான போட்டியில் கிடையாது – பிசிசிஐ அறிவிப்பு !

பாம்பு பிடிக்க அனுமதி :

  இதனால் சுரேஷுக்கு வனத்துறை லைசென்ஸ் வழங்க முடிவு செய்து உள்ளது. மேலும் இவர் பாம்பு பிடிப்பது அறிவியல் முறைக்கு எதிரானது என்று பல வனத்துறை அதிகாரிகள் எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தனர். ஆனால் வாவா சுரேஷ் வனத்துறையின் விதிமுறைகளை கடைபிடிப்பேன் என்று கூறியுள்ளதால் பாம்புகளை பிடிக்க லைசன்ஸ் வழங்க கேரளா வனத்துறை முடிவு செய்து இருக்கின்றது. 

பாம்புகளின் நண்பன் என்று அழைக்கப்படும் சுரேஷ்க்கு தற்போது பாம்புகளை பிடிக்க கேரளா வனத்துறை லைசென்ஸ் வழங்க இருக்கின்றது. இனி தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் இவர் பாம்புகளை பிடிக்க அனுமதி தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *