அர்ஜுனின் இரண்டாவது மகளா இது? வாயடைத்து போன ரசிகர்கள் – போட்டோ வைரல்!!
அர்ஜுனின் இரண்டாவது மகளா இது? – தென்னிந்திய சினிமாவில் ஆக்சன் கிங் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் அர்ஜுன். தற்போது இவர் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாக விடாமுயற்சி படத்தில் படு மோசமான வில்லனாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து சினிமாவில் படு பிசியாக இருந்து வந்த அவர் சார்ஜா நிவேதிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யாவை நம் எல்லோருக்கும் தெரியும். அவர் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் நடித்திருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதையடுத்து சொல்லிவிடவா படத்தில் நடித்தார். தற்போது தம்பி ராமையா மகனை திருமணம் செய்ய இருக்கிறார். அதனால் அவரை எல்லாருக்கும் தெரியும். ஆனால் அஞ்சனாவை யாருக்கும் தெரியாது. ஏனென்றால் அவர் சினிமா பக்கமே வராமல் தனது பிஸ்னஸில் ஆர்வம் கொண்டு அதில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து கிளாமர் உடையில் ஸ்டைலாக இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இவரின் தற்போதைய போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அர்ஜுன் மகளா இது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.