தனுஷின் கேப்டன் மில்லர்தனுஷின் கேப்டன் மில்லர்

அசுர நாயகன் தனுஷின் புதிய படமான கேப்டன் மில்லர் படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவை கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். அவரின் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். அவர் நடித்த ஆடுகளம் , அசுரன் திரைப்படத்திற்காக தேசிய விருதுபெற்றார். தற்போது அவர் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

செம்ம டிவிஸ்ட்.., மிக் எவிக்சனில் வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ட்ராங்கஸ்ட் பிளேயர்.. இத யாரும் எதிர்பார்கலையே பிக்பாஸ்!!

கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் , சிவராஜ் குமார் போன்ற பல நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்துள்ளார். G .V . பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

JOIN WHATSAPP CINEMA

கேப்டன் மில்லர் படமானது வருகிற ஜனவரி 12 ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட உயர்நீதி மன்றம் தடை உத்தரவு போட்டுள்ளது.அதனால் திரைப்படங்களை 1166 இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *