தனுஷின் "ராயன்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்  ‘அடங்காத அசுரன்’ வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தனுஷின் "ராயன்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்  ‘அடங்காத அசுரன்’ வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷின் “ராயன்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்  ‘அடங்காத அசுரன்’ வெளியீடு: நடிகர் தனுஷ் தற்போது நடித்து இயக்கியுள்ள திரைப்படம் தான் ராயன். இப்படத்தில் அவருடன் சேர்ந்து எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது. மேலும் அண்மையில் வெளியான போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இதனால் படத்தோட எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. மேலும் இப்படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, தனுஷ் நடிக்கும் “ராயன்” படத்தில்  இடம்பெற்ற ‘அடங்காத அசுரன்’  முதல் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்களுக்கு தடை – கருத்தடை செய்ய தமிழக அரசு உத்தரவு!

தனுஷின் “ராயன்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்  ‘அடங்காத அசுரன்’ வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *