இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? அப்ப உடனே இத பண்ணுங்க.., தேர்தல் ஆணையம் அதிகாரி அறிவிப்பு!!!

இந்தியாவின் மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் 2024க்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 3.03 கோடி  ஆண் வாக்காளர்கள் என்றும், 3.14 கோடி பெண் வாக்காளர்கள் என்றும்  8,294 பேர் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த வாக்காளர்கள் என்றும் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த வருடம் 18 வயது  பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு ஈசியாக விண்ணப்பிக்க மூன்று வழிமுறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-யை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் www.voters.eci.gov.in என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து voters helpline என்ற ஆப்பை டவுன்லோட் செய்து அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர்களே.., தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.., இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

இந்த மூன்று வழிமுறைகளை பயன்படுத்தி உடனே 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

Leave a Comment