ஹமாஸ் படையினர் முழுமையாக அழிக்கப்படுவர் இஸ்ரேல் உறுதிஹமாஸ் படையினர் முழுமையாக அழிக்கப்படுவர் இஸ்ரேல் உறுதி

       ஹமாஸ் படையினர் முழுமையாக அழிக்கப்படுவர் இஸ்ரேல் உறுதி. இஸ்ரேல் பாலஸ்தீனம் போரில் இஸ்ரேல் ராணுவத்திற்கு அமெரிக்க ராணுவம் இணைத்துள்ளது. தற்போது ஹமாஸ் படையினரை அழிக்க இஸ்ரேல் தரைப்படையினர் தயாராக உள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.

” ஹமாஸ் படையினர் முழுமையாக அழிக்கப்படுவர் ” இஸ்ரேல் உறுதி ! முழு விபரம் உள்ளே 

ஹமாஸ் படையினர் முழுமையாக அழிக்கப்படுவர் இஸ்ரேல் உறுதி

முதல் நாளில் 5,000 ராக்கெட் குண்டுகள் :

  ஹமாஸ் தீவிரவாத படைகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையில் போர் ஆரம்பமானது. அன்றைய நாளில் ஹமாஸ் படையினர் 5,000க்கும் அதிகமான ராக்கெட் குண்டுகள் இஸ்ரேல் மேல் வீசப்பட்டது. இதில் 1,000 பேர்கள் இறந்துள்ளனர். பலர் காயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். மேலும் இஸ்ரேல் பகுதியை சேர்ந்த 150 க்கும் அதிகமான நபர்களை ஹமாஸ் படையினர் பாலஸ்தீனர்களின் முக்கிய நகரமான காசா பகுதிக்கு சிறை கைதிகளாக பிடித்து சென்று விட்டனர். 

JOIN WHATSAPP CHANNEL

காசா எல்லை இஸ்ரேல் ராணுவத்தினர் கையில் :

  இதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுக்கும் நோக்கில் ஹமாஸ் படையினர் இருக்கும் காசா பகுதியை மையப்படுத்தி வான் வெளி தாக்குதல் நடத்தியது. பத்து மணி நேரம் தொடர்ந்த இந்த தாக்குதலில் 500க்கும் அதிகமான காசா பகுதி மக்கள் உயிரிழந்து விட்டனர். தற்போது காசா எல்லைப்பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவத்தினர் கையில் இருக்கின்றது.  

அமெரிக்கா போர் கப்பல் வருகை :

  இஸ்ரேல் பாலஸ்தீனம் போரில் இஸ்ரேயலுக்கு ஆதரவாக அமெரிக்கா இணைந்துள்ளது. இதனால் அமெரிக்காவின் மிகப்பெரிய போர் கப்பல் இஸ்ரேல் கடல் பகுதிக்கு வந்துவிட்டது. இக்கப்பலில் அதிநவீன போர் விமானம் மற்றும் ஆயுதங்கள் வைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க போர் கப்பல் இஸ்ரேல் நாட்டிற்கு வந்ததன் முக்கிய காரணம் , அருகில் இருக்கும் ஈரான் அல்லது வேற எந்த நாடுகளும் பாலஸ்தீனம் மக்களுக்கு ஆதரவாக இணைந்தால் அமெரிக்கா அந்நாட்டை எதிர்ப்போம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.  

காசா மக்கள் வெளியேற்றம் :

   காசா பகுதியில் 30 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு இஸ்ரேல் ராணுவத்தினர் அறிவிப்பு ஒன்றை கூறியுள்ளது. இதில் ” காசா பகுதியை அழிக்க இருக்கின்றோம். உயிர் வாழ வேண்டும் என்று நினைக்கும் காசா மக்கள் நாட்டை விட்டு வெளியே சென்று விடுங்கள்”  என்று கூறியுள்ளனர். இதில் காசா பகுதியில் வசிக்கும் பொது மக்கள் லட்சக்கணக்கான மக்கள் காசா பகுதியை விட்டு வெளியேற தொடக்கி உள்ளனர்.

தமிழகத்தில் நாளை மின்தடை (12.10.2023)  ! இந்த மாவட்ட மக்கள் இப்போவே அலெர்ட் ஆய்க்கோங்க !

இருளில் மூழ்க இருக்கும் காசா :

   உணவு , நீர் , மின்சாரம் , தொலைத்தொடர்பு மற்றும் மருந்துகள் என அனைத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது. வீடுகள் இடிக்கப்பட்டு குண்டுகள் விழும் சத்தம் மட்டுமே காசா பகுதியில் கேட்டு வருகின்றது. மேலும் எரிபொருள் இல்லாமல் தற்போது ஒரே ஒரு மின் நிலையம் மட்டும் இயங்கி வருகின்றது. அதுவும் இன்னும் சில மணி நேரங்களில் இயங்காது நின்று விடும் சூழல் இருக்கின்றது என்று ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். 

இஸ்ரேல் தாக்குதல் தற்போது லெபனான் மேல் :

  லெபனான் பகுதியை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஹமாஸ் படையினருடன் இணைந்து இஸ்ரேல் வடக்கு பகுதியின் மேல் தாக்குதல் நடத்தியது. மேலும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் உள்ளே நுழைந்து விட அதிகளவில் முயற்சி செய்து வருகின்றனர். தற்போது இஸ்ரேல் ராணுவத்தினர் பதிலடி கொடுக்கும் விதமாக லெபனான் மீது தாக்குதலை தொடர்ந்துள்ளது. மக்கள் தங்களின் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதியை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

இஸ்ரேல் ராணுவத்தின் பலம் அதிகரிப்பு :

   ராணுவத்தில் 1,73 வீரர் மற்றும் வீராங்கனைகள் இருக்கின்றனர். மேலும் 4,65 லட்சம் ராணுவ பயிற்சி முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் இருக்கின்றார்கள். அவர்களில் 3லட்சம் பேர்கள் தற்போது போருக்கு இணைந்துள்ளனர். 

இஸ்ரேல் ராணுவத்தினர் இனி எந்த பிரச்சனையும் நடக்க கூடாது என்பதற்க்காக காசா பகுதியை அழிக்கவேண்டும் என்ற நோக்கில் இருக்கின்றனர். காசா பகுதியை சுற்றி 3 லட்சம் இஸ்ரேல் நாட்டு ராணுவத்தினர் இருக்கின்றனர். மேலும் அமெரிக்கா இஸ்ரேல் ராணுவத்துடன் இணைந்துள்ளது. இரு நாட்டிற்கும் இடையில் ஏற்பட்டு உள்ள இப்போரில் பொது மக்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *