தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தன ரியோ ராஜ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜோ. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. மேலும் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக இரண்டு புது முக நடிகைகள் நடித்திருந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதில் கல்லூரி காலத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடித்து பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் மாளவிகா மனோஜ். இவர் மலையாள படங்களில் நடித்து தற்போது ஜோ படத்தின் மூலம் ஹீரோயினாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர், சவுதி அரேபியாவில் மிகவும் பேமஸான பகுதியான ஜித்தா என்ற பகுதியில் தான் பிறந்து வளர்ந்தாராம்.
குறிப்பாக அங்கயே தான் தனது பள்ளி படிப்பையும் முடித்தாராம். மேலும் அவர் நடிப்பையும் தாண்டி ஒரு நடனமும் செம்மயாக ஆடுவாராம். மேலும் அவருடைய அம்மா பாரம்பரிய நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை மாளவிகா மனோஜ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.