நீலகிரி மாவட்ட TNRD வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டும் தான் !

  நீலகிரி மாவட்ட TNRD வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் செயல்பட்டு வருகின்றது. இங்கு இரவு காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

நீலகிரி மாவட்ட TNRD வேலைவாய்ப்பு 2023

  அதன் நீலகிரி மாவட்ட TNRDல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN SKSPREAD WHATSAPP

  நீலகிரி மாவட்ட TNRDன் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  இரவுக்காவலர் பணியிடங்கள் மேற்கண்ட ஒன்றியத்தில் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  ஒரு இரவுக்காவலர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.

  தமிழக அரசின் கீழ் செயல்படும் ஏதேனும் ஒரு கல்வி நிலையத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

ssc executive information technology recruitment 2023 ! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க ! 

  இரவுக்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும் ஆதிதிராவிடர் ( அருந்ததியர் , விதவை பெண்கள் ) அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். நீலகிரி மாவட்ட TNRD வேலைவாய்ப்பு 2023.

  ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் இரவுக்காவலர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அரசின் வழிமுறைகளின் படி மாத ஊதியமாக வழங்கப்படும். 

  26.11.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

  கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தபால் மூலம் அல்லது அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

  ஆணையர் ,

  கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ,

  நீலகிரி ,

  தமிழ்நாடு .

  1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் 

  2. பள்ளி மாற்று சான்றிதழ் ( TC )

  3. கல்வி தகுதி சான்றிதழ் 

  4. சாதி சான்றிதழ் 

  5. இருப்பிடச் சான்றிதழ் ( ஆதார் கார்டு , வாக்காளர் அடையாள அட்டை , குடும்ப அட்டை , வீட்டு வரி ரசீது )

  6. முன்னுரிமை சான்றிதழ் 

போன்ற சான்றிதழ்களின் ஜெராக்ஸ் உடன் சுய கையொப்பம் இட்டு விண்ணப்படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

  1. விண்ணப்பம் முழுமையாக நிரப்பட்டு இருக்க வேண்டும்.

  2. தவறான விவரங்கள் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். 

  3. கால நேரத்திற்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

  4. தகுதி இல்லாத விண்ணப்பமும் நிராகரிப்பு செய்யப்படும்.

  5. விண்ணப்படிவத்துடன் இணைத்த சான்றிதழ்களின் அசல் சான்றிதழ் நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும். 

  நீலகிரி மாவட்ட TNRDன் கோத்தகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக இருக்கும் இரவுக்காவலர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

Leave a Comment