ராம்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023ராம்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023

 ராம்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023. தமிழக அரசின் கீழ் ராம்நாடு மாவட்ட நயினார்கோவில்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (Tamil Nadu Rural Development and Panchayat Raj Department – TNRD )இயங்கி வருகின்றது.

ராம்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023

இங்கு இரவுக்காவலர் பணியிடம்  காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. TNRDல் காலியாக இருக்கும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி, கட்டணம்  போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

JOIN WHATSAPP GET MORE JOBS

  ராம்நாடு மாவட்ட நயினார்கோவில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறையில் ( TNRD ) காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  இரவு காவலர் பணியிடம் ( Night Watchman )TNRDல் காலியாக இருக்கின்றது.

  இரவு காவலர் – 1

  இரவு காவலர் விண்ணப்பிக்கும் நபர் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

அரசு வேலைவாய்ப்பு செய்திகள் (Today Jobs) 2023 ! 

  18 முதல் 32 வயது வரை இருக்கும் நபர்கள் ராம்நாடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இருக்கும் கலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இரவு காவலர் – ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில் மாத ஊதியமாக தகுதியான நபருக்கு வழங்கப்படும்.

  நாளை முதல் 08.12.2023 அன்று வரை 5.45 மணிக்குள் மேற்கண்ட துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடையவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.  

  தபால் மூலம் அல்லது அலுவலகத்திற்கு நேரில் வந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  ஆணையாளர் / வட்டார வளர்ச்சி அலுவலர் ,

  ஊராட்சி ஒன்றியம் ,

  நயினார்கோவில் ,

  இராமநாதபுரம் மாவட்டம் – 623705 ,

  தமிழ்நாடு .

  1. கல்வித்தகுதி சான்றிதழ்  

  2. இருப்பிடச் சான்றிதழ்

  3. முன்னுரிமைச் சான்றிதழ்

  4. ஆதார் கார்டு போன்றவற்றின் நகல்  விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

நயினார்கோவில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

  விண்ணப்பதாரர்கள் அனுப்பிய விண்ணப்பபடிவத்தில் இருந்து தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணல் மூலம் பணி அமர்த்தபடுவர்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *