தமிழ் புத்தாண்டு 2024தமிழ் புத்தாண்டு 2024

தமிழ் புத்தாண்டு 2024. சித்திரை முதல் நாள் – ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியா மட்டும் அல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் மற்றும் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இந்த நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

மன்னர்ராட்சி காலகட்டத்தில், ஒவ்வரு மன்னர்களின் பிறந்த நாளின் அடிப்படியில் தமிழ் மாதங்களுக்கு பெயர் சூட்டப்பட்டதாக என்று ஒரு வரலாறு உண்டு. அதே போல், தமிழ் ஆண்டு அளக்கப்படுவது அறிவியல் ரீதியாக என்றும் கூறப்படுகிறது. தமிழ் வருடத்தின் கால அளவானது சூரியன், பூமியால் சுற்றிவரப்படும் 365 நாட்களே தமிழ் வருட கால அளவாகும். சூரியன் மேசா ராசியில் வசிப்பது ஆண்டு தொடங்கும் எனவும், மீன ராசியிலிருந்து வெளிவருவது ஓர் ஆண்டு முடியும் எனவும் கணக்கிடப்படுகிறது.

தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேசத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர்.

கலியுகத்தை கணித்த வேதவியாசர் ! 5000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது அப்படியே நடக்கும் அதிசயம், நீங்கள் சந்திக்கும் பிரச்சனை இருக்கா பாருங்க !

தமிழ் புத்தாண்டு என்பது சித்திரை கனி காணுதல் எனும் விழாவாக குமரி மாவட்ட பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்பு, அனைவராலும் கொண்டாடப்பட்ட இந்த விழா நாளடைவில் மாறிவிட்டதாக கூறப்படுகிறது.

புத்தாண்டிற்கு முதல் நாள், முக்கனிகள், எலும்பிச்சை பழம், வெற்றிலை பாக்கு, ஏதேனும் தங்க நகை, ருபாய் நோட்டுகள், முகம் பார்க்கும் கண்ணாடி இது அனைத்தும் இது அனைத்தும் ஒரு தாம்பூலத்தில் வைத்து, அதனை தூங்கும் இடம் அருகினில் வைத்து தூங்கி எழுந்து, புத்தாண்டு அன்று கண் விழிக்கும் போதே இந்த தாம்பூலத்தில் கண்விழித்து, அதில் இருக்கும் கண்ணாடியை பார்க்கவேண்டும் என்பது ஒரு வழக்கமாக இருக்கிறது.

Join Whatsapp Channel

தமிழ் புத்தாண்டு அன்று உப்பு மற்றும் மஞ்சள் வாங்கி, இவை இரண்டையும் வைத்து வணங்க வேண்டும் என்று ஓர் ஐதீகம் உண்டு. அதே போல், சித்திரை முதல் நாள் அன்று அறு சுவைகளிலும் சமைத்து, இல்லாதவர்களுக்கு பசியாற்றினால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல ஆண்டாக அமையும் என்றும் கூறப்படுகிறது. பறவைகளுக்கு, விலங்குகளுக்கு வீட்டின் வாசலில் தண்ணீர் வைப்பதும் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *