தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களின் பட்டியல் 2024 ! வெளியிட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை !தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களின் பட்டியல் 2024 ! வெளியிட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை !

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களின் பட்டியல் 2024. தமிழ்நாட்டில் அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கையை அவ்வப்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரத்து 116 ஆக உள்ளது.

இதில், ஆண்கள் 24 லட்சத்து 74 ஆயிரத்து 985 பேர், பெண்கள் 28 லட்சத்து 98 ஆயிரத்து 847 பேர், மூன்றாம் பாலினத்தனவர் 284 பேர் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் : 10 லட்சத்து 69 ஆயிரத்து 609 பேர்,

19 வயது முதல் 30 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள் : 23 லட்சத்து 63 ஆயிரத்து 129 பேர்,

31 வயது முதல் 45 வயது வரை உள்ள அரசு பணிக்காக பதிவு செய்தோர் : 16 லட்சத்து 94 ஆயிரத்து 518 பேர்,

46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்ச்சி பெற்ற விண்ணப்பத்தார்கள் : 2 லட்சத்து 40 ஆயிரத்து 537 பேர்,

மேலும் 60 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் : 7 ஆயிரத்து 323 பேர்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் அரசு பணிக்காக பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளின் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 803 ஆக உள்ளது. மேலும் இதில், கை,கால் குறைபாடுடையோரில் ஆண்கள் 76 ஆயிரத்து 260 பேர் மற்றும் பெண்கள் 39 ஆயிரத்து 222 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோரின் எண்ணிக்கையில் ஆண்கள் 9 ஆயிரத்து 586 பேர் மற்றும் பெண்கள் 4 ஆயிரத்து 582 பேர்.

பார்வையற்றோர்களில் ஆண்கள் 12 ஆயிரத்து 567 பேர்மற்றும் பெண்கள் 5 ஆயிரத்து 766 பேர்.

தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இலவச இணைய வசதி – மாணவர்கள் மகிழ்ச்சி!!

மேலும் அறிதிறன் குறைபாடு மற்றும் இதர குறைபாடு உள்ள நபர்களில் ஆண்கள் 1 ஆயிரத்து 375 பேர், பெண்கள் 445 பேர் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *