தமிழகத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை: தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சில பகுதிகளுக்கு மஞ்சள், ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Headphone பயன்படுத்துபவரா நீங்கள்? விரைவில் இதயம் & மூளை பாதிக்கப்படும் அபாயம் – ஷாக்கிங் தகவல்!!
அதாவது தமிழகத்தில் இன்று தேனி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி, மதுரை, மயிலாடுதுறை, கடலூர், சேலம், தர்மபுரி, தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை – tamilnadu red alert districts list may 16 2024